சிங்கப்பூரில் ஒரே இரவில் 3 இடங்களில் தீ விபத்து – 515 பேர் வெளியேற்றம்

scdf-fires
Facebook / Singapore Civil Defence Force

சிங்கப்பூரில் நேற்று வெள்ளிக்கிழமை (ஜன. 28) இரவும், சனிக்கிழமை (ஜன. 29) அதிகாலையும் அதாவது 12 மணி நேர இடைவெளியில் Tampines, Telok Blangah மற்றும் Bedok ஆகிய மூன்று தனித்தனி இடங்களில் தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்தில் 3 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரட்டையர் மரணம்: பலத்த பாதுகாப்புடன் தந்தையை சம்பவ இடத்திற்க்கு அழைத்து சென்ற போலீசார் – வீடியோ

Tampines

நேற்று இரவு 10:30 மணியளவில் பிளாக் 941 Tampines Ave 5ல் ஏற்பட்ட தீ விபத்து குறித்து SCDF படைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

சம்பவ இடத்தில், ஆடவர் ஒருவர் தரையில் மயங்கிக் கிடந்ததாகவும், பின்னர் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக அவரை அங்கிருந்து இருந்து மீட்டனர் என்றும் கூறியுள்ளனர்.

அவர் சோதனை செய்யப்பட்டு, சாங்கி பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அதன் பின்னர், பக்கத்துக்கு குடியிருப்புகளில் இருந்து சுமார் 180 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

பிளாக் 204 Bedok North Street 1

அதே போல, நேற்று இரவு 11:50 மணியளவில் பிளாக் 204 Bedok North Street 1ல் ஏற்பட்ட தீ விபத்து குறித்து SCDF படைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

​​​​தீ, பிளாக்கின் தரை தளத்தில் உள்ள காபிஷாப்பை முழுவதுமாக எரித்து நாசம் செய்தது. மேலும் கட்டிடத்தின் ஓரத்தில் இருந்த சமையலறை கழிவுநீர் குழாய் ஒன்றும் தீப்பிடித்து எரிந்தது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காபி கடைக்கு மேலே வசித்த சுமார் 55 பேர் வெளியேற்றப்பட்டனர்.

மேலும் இந்த சம்பவத்தில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

பிளாக் 39 Telok Blangah Rise

இன்று சனிக்கிழமை அதிகாலை 4:40 மணியளவில் பிளாக் 39 Telok Blangah Riseல் நடந்த மூன்றாவது தீ விபத்து குறித்து SCDFக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தீ 10 வது மாடி குடியிருப்பில் கொழுந்துவிட்டு எரிந்தது. தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும்போதே, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

சம்பவ இடத்தில் பெண் ஒருவர் மயக்கமடைந்து தரையில் கிடந்துள்ளார். அவரை உடனடியாக மீட்ட SCDF வீரர்கள், லிப்ட் லாபிக்கு கொண்டு வந்தனர்.

பின்னர், அவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு (SGH) கொண்டு செல்லப்பட்டார். அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 280 பேர் வெளியேற்றப்பட்டனர்.

இந்த தீ விபத்துக்கான காரணங்கள் விசாரணையில் உள்ளன.

மூன்று தீ விபத்துகளில் மொத்தம், 515 பேர் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

கல்லாங் MRT அருகே ரயிலில் அடிபட்டு உயிரிழந்த வெளிநாட்டு ஊழியர்…போதைப்பொருள் அருந்தி தற்கொலை