புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மாதிரி போஸ் கொடுத்தா, என்னடா பண்ணி வச்சுருக்கீங்க !

Sugar Friends Tea

Sugar Friends Tea தயாரிப்பை விளம்பரப்படுத்தும் போட்டோஷாப் செய்யப்பட்ட படங்கள் குறித்து சிங்கப்பூர் எம்.பி.க்கள் எச்சரித்துள்ளனர்.

மூத்த மாநில அமைச்சர்கள் ஜனில் புதுச்சேரி மற்றும் டான் கியாட் ஆகியோர் உணவு மற்றும் பான தயாரிப்பு ஒன்றை விளம்பரப்படுத்த பயன்படுத்திய போட்டோஷாப் செய்யப்பட்ட புகைப்படத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். போட்டோஷாப் செய்யப்பட்ட அந்த படம் இந்த ஆண்டு மே மாதம் ,புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MOU) கையெழுத்திடும் போது எடுத்ததாகும். அதில் MOH (சுகாதார அமைச்சகம்) சில தயாரிப்புகளை அங்கீகரிப்பது போல் புகைப்படம் அமைந்துள்ளதாகவும் அவை போலியானவை என்றும் கூறியுள்ளனர்.

யூடியூப் விளம்பரத்தில் தோன்றிய போட்டோஷாப் செய்யப்பட்ட அந்த புகைப்படம், ஜனில் மற்றும் டான் கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களுடன் நிற்பதற்கு பதிலாக ” Sugar Friends Tea ” பெட்டிகளுடன் நின்று கொண்டிருப்பது போல் மாற்றியமைக்கப்பட்டிருந்தது. அந்த தயாரிப்பு MOH ஆல் அங்கீகரிக்கப்பட்டது என்றும் ஒருவரின் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் என்றும் விளம்பரப்படுத்தப் பயன்படுத்தபட்டது.

“ஒரு நடைமுறையாக, அரசு அதிகாரிகள் ஒரு குறிப்பிட்ட தயாரிப்புகளை ஆதரிப்பதில்லை. எனவே விழிப்புடன் இருங்கள், இதுபோன்ற போலி விளம்பரங்களுக்கு இரையாகிவிடாதீர்கள்” என்றும் ஜனில் கூறியுள்ளார். மேலும் இந்த விஷயத்தை Infocomm Media Development Authority கவனித்து வருவது குறிப்பிடத்தக்கது.