சிங்கப்பூருக்கு குறிப்பிட்ட இந்த நாட்டை சேர்ந்தவர்கள் பயணம் மேற்கொள்ளலாம்.!

Japan to allow residents to travel to 12 countries including Singapore next month
Pic: REUTERS/Athit Perawongmetha

சிங்கப்பூர் உட்பட 12 நாடுகள் மற்றும் வட்டாரங்களுக்கு ஜப்பான் நாட்டவர்கள் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள ஜப்பான் அடுத்த மாதம் அனுமதி வழங்கியுள்ளதாக யொமியூரி (Yomiuri) செய்தி நிறுவனம் நேற்று (08-10-2020) தெரிவித்துள்ளது.

மேலும், மலேசியா, தென்கொரியா, வியட்னாம், நியூசிலாந்து, சீனா, தைவான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளும் ஜப்பானின் பட்டியலில் உள்ளதாக அந்த செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க: “கொலை செய்ய எண்ணவில்லை, மிரட்ட மட்டுமே எண்ணினேன்” – முதலாளியை கொன்ற வெளிநாட்டுப் பணிப்பெண்..!

ஜப்பான் அரசு தற்போது 159 நாடுகள் மற்றும் வட்டாரங்களுக்குப் பயணத் தடை விதித்துள்ள நிலையில், குறிப்பிட்ட இந்த 12 நாடுகளுக்கு தேவையற்ற பயணங்கள் மேற்கொள்ளுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு பயணிகளுக்குப் பரிந்துரை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குடியிருப்பு தகுதியுடைய ஜப்பான் நாட்டவர்கள் மற்றும் வெளிநாட்டு தேசிய வர்த்தகப் பயணிகளை அனுமதிக்க ஜப்பான் திட்டமிடுவதாக நிக்கெய் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: சிங்கப்பூரிலிருந்து தமிழகம் செல்லும் விமானங்களின் பட்டியல் – தூதரகம்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…