விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க சிங்கப்பூர் விரும்புவதாக கூறிய பிரதமர் லீ – எப்போது ஜப்பானின் பயண விதிகள் மாற்றப்படும்?

japan tokyo Haneda flight service

சிங்கப்பூரில் Covid-19 வைரஸ் தொற்று எண்ணிக்கை குறைந்ததை தொடர்ந்து சர்வதேச நாடுகளுக்கிடையேயான போக்குவரத்து மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் பிரதமர் லீ ஊடக நிறுவனத்தின் நேர்காணலின் போது ஜப்பான் உடனான சிங்கப்பூரின் விமான போக்குவரத்து சேவைகளை வலுப்படுத்த விரும்புவதாகவும், அந்நாட்டுக்கான விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

திங்கள் கிழமை அன்று (May 23) வெளியிடப்பட்ட நேர்காணலில், இத்தகைய விமானங்களுக்கு சிங்கப்பூரில் கிராக்கி அதிகமாக உள்ளதாக.பிரதமர் லீ கூறினார். ஜப்பானில் சர்வதேச பயணங்களுக்கு இன்னும் கட்டுப்பாடுகள் இருந்தாலும், மீண்டும் திறக்கப்படுவதற்கு முன்னதாக சிங்கப்பூர் தயாராக வேண்டும் என்றும் ஜப்பான் விரைவில் தனது பயணக் கட்டுப்பாடுகள் ஏமாற்றும் என்று நம்புவதாகவும் பிரதமர் கூறினார்.

தடுப்பூசி போட்டுக் கொண்ட மற்றும் ஊக்கப்படுத்த பட்ட சுற்றுலாப் பயணிகள் ஜப்பானுக்கு செல்லக்கூடிய சோதனை திட்டத்தில் நான்கு நாடுகள் ஈடுபட்டுள்ளன. அவற்றில் சிங்கப்பூரும் ஒன்றாகும். குறிப்பாக ஜப்பானின் தலைநகரம் டோக்கியோவில் உள்ள Haneda விமான நிலையத்திற்கு விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க சிங்கப்பூர் விரும்புவதாக கூறினார்.

ஜப்பானின் டிஜிட்டல் கார்டன் சிட்டி நேஷன் விஷன் மற்றும் சிங்கப்பூரின் ஸ்மார்ட் நேஷன் திட்டம் ஆகிய டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் இரு நாடுகளின் முயற்சிகளையும் பிரதமர் மேற்கோள் காட்டினார் .இருநாடுகளுக்கும் மாற்று எரிசக்தி மற்றும் மேம்படும் நிலையான பொருளாதாரங்களில் ஒத்துழைப்பதற்கான சாத்தியமான பகுதியாக பசுமைப் பொருளாதாரத்தை பரிந்துரைத்தார்.