ஐயோ!என் மூக்கை விடு!! – சிங்கப்பூரில் மைனாக்களின் சண்டையை படம்பிடித்த நபர்;முகநூலில் விளக்கம்!

myna-fighting-cover - pc mothership.sg
சிங்கப்பூரில் மைனாக்களை காண்பது என்பது வழக்கமான ஒரு காட்சிதான்.அவை ஆங்காங்கே சுற்றித் திரிந்து தங்கள் நாளைக் கழிக்கின்றன.மேலும்,மைனாக்கள் தன் இனத்தோடு பல்வேறு காரணங்களுக்காக ஒன்றையொன்று முட்டி மோதி சண்டை போட்டுக் கொள்வதும் ஒரு பொதுவான நிகழ்வாகிப் போனது.
மைனாக்களுக்கு இடையேயான தாக்குதல்கள் அவ்வப்போது புகைப்படங்களில் சிக்கும்.கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஜவான் மைனாக்கள் நடுவே நடந்த சண்டையின் போது ஆண்ட்ரு என்பவர் அருமையாக படம்பிடித்துள்ளார்.
இந்த வன்முறை பிற்பகல் 1.30 மணியளவில் பாசிர் ரிஸ் பூங்காவில் இடம்பெற்றதாக அவர் கூறினார்.மேலும்,மைனாக்களிடையே சண்டை எப்படி ஏற்பட்டது என்பதையும் Nature Society என்ற முகநூல் குழுவில் விளக்கினார்.

மைனாக்கள் போடும் சண்டையை இதுவரை மூன்று முறை பார்த்திருக்கிறேன்.நான் பார்த்ததிலேயே இது ‘பெரிய சண்டை’ என்று ஆண்ட்ரூ கூறினார்.இது போன்ற சண்டைகள் பொதுவாக பிரதேசம் அல்லது இனச்சேர்க்கையில் ஏற்படும் என்று இரண்டு வருட பறவை ஆர்வலரான ஆண்ட்ரூ பகிர்ந்து கொண்டார்.
ஒரு மைனாவை மற்ற இரண்டு பறவைகள் தரையில் வீழ்த்தி தாக்க முயல்வதை படத்தில் பார்க்கலாம்.தரையில் வீழ்த்தப்பட்ட மைனாவின் நிலை மோசமாகிவிட்டது.மற்றொரு மைனா தரையிறங்கியது மற்றும் அதன் கண்ணை பிடுங்குவதற்கு அருகில் இருந்தது.இறுதியில், பறவைகள் “வேறு எங்காவது போருக்கு” பறந்து சென்று விட்டதாகவும் அவர் கூறினார்.