ஹார்ன் அடித்தது குத்தமா? – ஊழியரை ஏற்றிச் செல்லும் லாரி ஓட்டுனரிடம் சீறிப்பாய்ந்த விதி மீறும் குழு (காணொளி)

Jaywalkers disturb lorry driver

லாரி ஓட்டுநர் ஒலி எழுப்பியதற்காக சாலை விதிகளை மதிக்காத சிலர் கோபமடைந்து, ஓட்டுனருக்கு தொல்லை தந்த வீடியோ அனைவரின் வெறுப்பையும் பெற்றுள்ளது.

கடந்த ஜனவரி 11ஆம் தேதி இரவு 9.30 மணியளவில் விக்டோரியா சாலையில் நடந்த இந்த சம்பவத்தின் வீடியோவை SG Road Vigilante என்ற பேஸ்புக் பக்கம் வெளியிட்டது.

ஓட்டுநர் கண்ணாடி வழி முன் அங்கத்தை பார்த்ததாக வீடியோ வெளியிட்ட பெண் பயணி – பெண்ணை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்

அந்த வீடியோவில், போக்குவரத்து சிங்னல் தங்களுக்குச் சாதகமாக இல்லாதபோதும், மூன்று பாதசாரிகள் சாலையைக் கடப்பதைக் காணலாம்.

அப்போது சாலையில் திரும்பும் வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றி செல்லும் லாரியின் ஓட்டுநர் அவர்களைப் பார்த்து ஒலி எழுப்பினர்.

இதனால் ஆத்திரமடைந்த பாதசாரிகளில் ஒருவர் ​​கோபத்துடன் லாரியை நோக்கி சைகை செய்வதைக் காணலாம். பின்னர், எரிந்த சிகரெட் துண்டை ஓட்டுநர் மீது வீச முயற்சிப்பதையும் காண முடிகிறது.

அதோடாது விடாமல் தொடர்ந்து ஓட்டுனரை துரத்தி தொந்தரவு செய்வதையும் வீடியோவில் பார்க்க முடிகிறது.

இந்த விடியோவை பார்த்த நெட்டிசன்கள், பாதசாரிகளின் இந்த செயல் தேவையற்றது என்றும் அவர்களை “கோமாளிகள்” என்றும் கடுமையாக சாடியுள்ளனர்.

சிங்கப்பூரில் அதிகரிக்கும் தொற்று: புதிதாக 956 பேர் பாதிப்பு – 692 பேருக்கு Omicron