வாழ்க்கைச் செலவுகளை சமாளிக்கப் போராடும் மக்கள் பேருந்து கட்டண மாற்றத்தை ஏற்பார்களா? – குரல் கொடுத்த அரசியல்வாதி!

Nigel Chua
இந்தாண்டின் முதல் நாளில் இருந்து லார்கின் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்தில் ஜோகூர் பாருவிலிருந்து சிங்கப்பூர் செல்லும் பயணிகளிடம் கூடுதலாக RM1 (S$0.30) வசூலிக்கப்படுகிறது.டிச. 27 ஆம் தேதி முதல் கட்டண விவரம் வெளியிடப்பட்டது.
பேருந்து சேவை 170, காஸ்வே லிங்க் CWL மற்றும் சிங்கப்பூர்-ஜோஹூர் எக்ஸ்பிரஸ் (SJE) போன்ற காஸ்வேயைக் கடக்கும் பேருந்து சேவைகளைப் பயன்படுத்தும் பயணிகளை மட்டுமே கட்டண அறிவிப்பு பாதிக்கும் என்று கூறப்படுகிறது.QR குறியீடு பாஸ்களை பேருந்து நிலையத்தில் பெறலாம். ஜோஹூரின் உள்ளூர் அரசியல்வாதியான கூ ஷியாவ் லீ கட்டணத்திற்கு எதிராகக் குரல் எழுப்பியுள்ளார்.
எல்லை தாண்டிய சேவைகளுக்கு பல உள்ளூர்ப் பேருந்துகள் பயன்படுத்தப்படும் நிலையில் எல்லை தாண்டிய பயணிகளிடம் மட்டும் கட்டணம் வசூலிப்பது நியாயமற்றது என்று கூ கூறினார்.பேருந்து நிலையத்த்தில் பயணிகளுக்கு போதுமான வசதிகளை உருவாக்கித் தராத நிலையில் கட்டணம் வசூலிப்பது நியாயமானது அல்ல என்று கூறினார்.

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினங்களை மேற்கோள் காட்டிய அவர் கட்டண மாற்றத்தை பயணிகள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் குறிப்பிட்டார்.