200- க்கும் மேற்பட்ட விமானிகள், விமான ஊழியர்களைப் பணியில் அமர்த்தத் திட்டமிட்டுள்ள விமான நிறுவனம்!

Photo: Jetstar Asia

 

 

கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு உலகலளவில் விமான போக்குவரத்துத்துறை உச்சத்தைத் தொட்டுள்ளது. உதாரணமாக, கொரோனா பெருந்தோற்று காரணமாக, பொருளாதார ரீதியாக கடும் நஷ்டத்தைச் சந்தித்த விமான நிறுவனங்கள், தற்போது அதிகளவில் லாபத்தை ஈட்டி வருகின்றனர். இதற்கு காரணம், பொதுமக்கள் விமானப் போக்குவரத்தை அதிகம் பயன்படுத்துவதே என்று கூறுகின்றனர் பொருளாதார நிபுணர்கள்.

முதலாளி வீட்டில் கைவரிசை காட்டிய வெளிநாட்டு பணிப்பெண்… S$50000 ரொக்கம் நகைகள் திருட்டு

இந்த நிலையில், ஆஸ்திரேலியா நாட்டின் பெல்போர்னை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஜெட்ஸ்டார் ஏசியா நிறுவனம் (Jetstar Asia), மலிவுக் கட்டணத்தில் விமான சேவையை வழங்கி வருகிறது. இந்நிலையில், சுமார் 200- க்கும் மேற்பட்ட விமானிகள் மற்றும் விமான ஊழியர்களைப் பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளதாக ஜெட்ஸ்டார் ஏசியா நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன், நேரடி நியமனங்கள் மூலம் ஊழியர்கள் பணியில் அமர்த்தப்படவுள்ளனர்.

அதன்படி, A320 ரக விமானங்கள் இரண்டை மேலும் ஜெட்ஸ்டார் ஏசியாவில் இணைக்கவுள்ளது. ஏற்கனவே, ஏழு விமானங்களை இயக்கி வருகிறது.

இது குறித்து ஜெட்ஸ்டார் ஏசியாவின் தலைமைச் செயல் அதிகாரி பரதன் பசுபதி கூறுகையில், அடுத்த 18 மாதங்களில் மேலும் விமானங்களைச் சேவையில் அமர்த்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. எனினும், மேற்கொண்டு தகவல்களைத் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

மது போதையில் வாகனம் ஓட்டி பிடிபட்ட 12 பேர்

கொரோனா பெருந்தொற்று காலத்தில், ஜெட்ஸ்டார் ஏசியா நிறுவனம், 100- க்கும் மேற்பட்ட பணியாளர்களை நீக்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.