சாங்கி விமான நிலைய அறிவிப்பால் கவலை அடைந்த விமான நிறுவனம்; “ஒருதலைப்பட்சமான நடவடிக்கை…” என சாடல்

Pic: File/Today

ஜெட்ஸ்டார் ஏர்வேஸ் நிறுவனத்தின் சேவைகளை, சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தின் 4ஆம் முனையத்துக்கு இடமாற்றம் செய்யும் நடவடிக்கைகள் ஒருதலைப்பட்சமானது என அந்நிறுவனம் சாடியுள்ளது.

சாங்கி விமான நிலையத்தின் 4ஆம் முனையம் (T4) வரும் செப்டம்பர் 13 அன்று மீண்டும் திறக்கப்படும் என கடந்த வெள்ளிக்கிழமை சாங்கி ஏர்போர்ட் குழுமம் (CAG) அறிவிப்பு செய்தது.

24 பயணிகளுடன் வந்த பேருந்து கவிழ்ந்து விபத்து… 19 பேர் மருத்துவமனையில் அனுமதி

ஜெட்ஸ்டார் உட்பட 16 விமான நிறுவனங்கள் அக்டோபர் 25ஆம் தேதி முதல் T4 க்கு இடமாற்றம் செய்யப்படும் என்றும் அதில் கூறப்பட்டது.

இது குறித்து ஜெட்ஸ்டார் ஏர்வேஸ் கூறியதாவது; ஜெட்ஸ்டார் சேவையை T4க்கு இடமாற்றம் செய்யும் இந்த திட்டத்தை ஒருதலைப்பட்சமாக பார்ப்பதாகவும், இந்த அறிவிப்பால் நாங்கள் மிகவும் ஏமாற்றம் அடைகிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

தற்போது, ஜெட்ஸ்டார் சேவை சாங்கி விமான நிலைய முனையம் 1 (T1) மற்றும் குறைந்த அளவில் முனையம் 2 லும் (T2) இயங்குகிறது.

இந்த மாற்றத்தால் தனது செயல்பாடுகள் பாதிக்கப்படும் என ஜெட்ஸ்டார் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஆடவரை காணவில்லை – கண்டுபிடிக்க உதவுங்க “மைக்செட்” வாசகர்களே!