உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சியுடன் சிங்கப்பூர் ஜுவல் சாங்கி விமான நிலையம்…

உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சியுடன், சிங்கப்பூர் விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜீவல் சாங்கி வளாகம், பார்வையாளர்களுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த சாங்கி விமான நிலையத்தில், சுமார் ஒரு லட்சத்து 35 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில், நவீன வசதிகளுடன் ஜூவல் சாங்கி வளாகம் கட்டப்பட்டுள்ளது. இங்கு 40 அடி உயரத்தில் ஒளி மற்றும் இசையுடன் கூடிய செயற்கை நீர் வீழ்ச்சி, கட்டடத்தின் 4வது மாடியில் பச்சை பசேல் தோட்டங்கள், ஓட்டல்கள், சினிமா திரையரங்குகள் மற்றும் விமான நிலையங்களின் 3 முனையங்களுக்கும் செல்லும் வழிகள் என அனைத்து வசதிகளும் சுமார் 170 கோடி செலவில் செய்யப்பட்டுள்ளன. இதற்கான முன்னோட்டமாக ஏப்ரல் 11 முதல் 16 வரை பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுமார் 5 லட்சம் பேர் இதை பார்ப்பதற்காக முன் பதிவு செய்துள்ளனர்.

Image Credits – MediaCorp

மேலும், இந்த ஜீவல் சாங்கி விமான நிலையத்தில் 280 க்கும் மேற்பட்ட உணவு மற்றும் குளிர்பான நிலையங்கள் உள்ளன. இதில் 95 சதவீத நிலையங்கள் லீசுக்கு கையகப்படுத்தப்பட்டுள்ளதாக சாங்கி விமான நிலைய குழுமம் தெரிவித்துள்ளது.

இந்த சாங்கி விமான நிலையம் திறப்பு விழா வருகின்ற ஏப்ரல் 17 ஆம் தேதி நடைபெற உள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

Source – Channel News Asia