பைன்டர் வேலைக்காக சென்ற ஊழியர்… தவறுதலான வேலையில் விடப்பட்டதால் போலீசில் சிக்கினார்

Man responds to job ad offering $150 for painting services, gets arrested

Singapore Job offering: பெண்டிமீர் ரோட்டில் உள்ள வீட்டின் வாசல் கேட்டில் வர்ணம் பூசும் வேலைக்கு சென்ற 52 வயது ஊழியர் ஒருவர் போலீசிடம் பிடிபட்டார்.

சட்டத்திற்கு புறம்பாக கடன் கொடுக்கும் நடவடிக்கைகளில் தொடர்புடைய சந்தேகத்தில் அவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன, மதம் இடையே பகைமையை தூண்டும் கருத்துக்கள்.. சுபாஸ் நாயருக்கு சிறை

கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி சட்டத்திற்கு புறம்பாக கடன் கொடுக்கும் நபர்களின் துன்புறுத்தல் தொடர்பாக போலீசுக்கு புகார் வந்தது.

போலீஸ் அதிகாரிகள் வந்து பார்த்தபோது, ஊழியர் அந்த வீட்டின் வாயிலில் வர்ணம் பூசுவதைக் கண்டனர், ஆனால் கேட் பூட்டு போட்டு இருந்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணையில், அந்த ஊழியர் $150 சம்பளத்துக்கு பைன்ட் அடிக்க வந்ததாகவும், இந்த வேலைவாய்ப்பு விளம்பரத்தை சமூக ஊடக தளத்தில் பார்த்ததாகவும் போலீசிடம் கூறினார்.

மேலும், கடன் பெற்றவர்களை துன்புறுத்த உரிமம் இல்லாத கடனாளி ஒருவரால் இந்த வேலை வழங்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது.

அந்த ஊழியர் மீது ஆகஸ்ட் 31ஆம் தேதி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

பகுதி நேர வேலைகளில் ஈடுபடும் போது, ​​குறிப்பாக விரைவாகவும் எளிதாகவும் பணம் தருவதாக உறுதியளிக்கும் வேலைகளில் ஈடுபடும் போது எச்சரிக்கையுடன் செயல்படுமாறு பொதுமக்களுக்கு காவல்துறை நினைவூட்டியது.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

வெளிநாட்டு ஊழியர்கள் தங்கள் வேலைகளை பறித்துக்கொள்வதாக சிங்கப்பூர் ஊழியர்கள் அச்சம்