சிங்கப்பூரில் $2000 வரை வேலை மோசடி – பொதுமக்களுக்கு காவல்துறையினர் எச்சரிக்கை

Man pleads guilty to sharing porn on WhatsApp

சிங்கப்பூரில் உள்ள டெலிவரி கொரியர்களில் வேலை பார்ப்பவர்களை குறிவைத்து நடத்தப்பட்ட வேலை மோசடியில் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து மொத்தம் $2000 வரை ஏமாற்றியுள்ளனர். தற்சமயம் இந்த மோசடி சிங்கப்பூரில் அதிகரித்து வருவதால் காவல்துறையினர் செவ்வாய்க்கிழமையன்று (May 10) பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த மோசடி செயலில் ஈடுபடுபவர்கள், பல்வேறு டெலிவரி தளங்களிலிருந்து, இரண்டு வெவ்வேறு வழிகளில் கொரியர்களை குறிவைப்பார்கள்.மோசடி செய்பவர்கள், டெலிவரி முடிவதற்கு முன்பு கொரியரிடம் அட்டையின் பின்னால் உள்ள குறியீட்டைக் கீறி வெளிப்படுத்தும்படி கேட்டு, பெற்றுக் கொண்டதற்கான ஆதாரமாக குறியீட்டில் புகைப்படத்தை அனுப்புவார்கள்.

கொரியர் செயல்பாடுகளுக்கு இணங்கிய பிறகு ,மோசடி செய்பவர்கள் தொடர்பு கொள்ள முடியாதவர்களாகி விடுவார்கள் . மேலும் பரிசு அட்டைகளுக்கான கொரியர் கட்டணத்தை திருப்பி செலுத்த மாட்டார்கள்.இது ஒரு வழியில் செய்யக்கூடிய மோசடி செயலாகும்.

இரண்டாவது வழியில் மோசடி செய்பவர்,பணம் அனுப்பும் ஏஜென்சியை கொரியர் பெற்றுக்கொள்ளும் ஏற்பாடு செய்வதற்கான இடமாக குறிப்பிடுவார். பின்பு அதற்கென ஒதுக்கப்பட்ட கொரியரரை தொடர்பு கொண்டு ,வெளிநாட்டு கணக்கிற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை மாற்றுமாறு கூறுவார். மேலும் ஒரு பணம் அனுப்பும் தொகைக்கு குறைந்தபட்சம் $100 வெகுமதியாக அளிப்பதாக உறுதியளிப்பார்.டெலிவரி செய்யும் இடத்தில் வெகுமதி தொகை அளிக்கப்படும் என்று கொரியருக்கு தெரிவிக்கப்படுகிறது.

டெலிவரி செய்யும் இடத்தில் யாரும் இல்லாததை அறியும்போது, தாங்கள் மோசடி செய்யப்பட்டதை உணருகிறார்கள். எனவே குறைந்த உழைப்பில் லாபகரமான வருமானத்தை வழங்குவதாக கூறும் சந்தேகத்திற்குரிய வேலைவாய்ப்புகளை ஏற்க வேண்டாம் என்று காவல்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.