போலி நிறுவன வங்கிக் கணக்குகள்… வேலை தருவதாக பணம் வாங்கிக்கொண்டு மோசடி – மூவர் கைது

singpass-credentials-misuse-scam
SPF

சிங்பாஸ் (Singpass) விவரங்களை முறைகேடாக பயன்படுத்தி வங்கிகளில் கணக்குகளை திறந்த மூவர் பிடிபட்டனர்.

கடந்த மே 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் தீவு முழுவதும் நடத்தப்பட்ட ஊழல் எதிர்ப்பு அமலாக்க நடவடிக்கையில் அவர்கள் சிக்கினர்.

“ஊழியர்கள் படிப்படியாக வேலையில் இருந்து நீக்கம் செய்யப்படுவர்” – Turf club

அவ்வாறான மோசடிகளில் ஈடுபட்ட சந்தேகத்தின்பேரில் 20 முதல் 50 வயதுக்கு உட்பட்ட மூன்று ஆண்களை போலீசார் கைது செய்தனர்.

மேலும் 26 முதல் 65 வயதுக்குட்பட்ட 15 ஆண்களும், ஏழு பெண்களும் போலீசாரின் விசாரணை வளையத்தில் உள்ளனர்.

கடந்த மார்ச் முதல், சிங்பாஸ் விவரங்களை முறைகேடாக பயன்படுத்தி இணையத்தில் நிறுவன வங்கிக் கணக்குகள் திறப்பதை போலீசார் கவனித்தனர்.

அவற்றை பயன்படுத்தி முதலீட்டு மோசடிகள் மற்றும் வேலை வாய்ப்பு மோசடிகள் செய்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில், விசாரணை வளையத்தில் உள்ள மொத்தம் 30 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

மேலும் மோசடியாக பெறப்பட்ட சுமார் S$189,000க்கும் அதிகமான தொகையும் பறிமுதல் செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்த விசாரணைகள் நடந்து வருகின்றன.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்