சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் 6600 காலிப்பணியிடங்கள் – தகுதியானவர்கள் நேர்காணலின் மூலம் பணி அமர்த்தப்படுவார்கள்

job vacancies at changi airport

சிங்கப்பூரில் Covid-19 காரணமாக இரண்டு ஆண்டுகள் வீழ்ச்சி அடைந்திருந்த விமான போக்குவரத்து துறை தற்பொழுது சுகாதார கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால் மீண்டு வருகிறது.வணிக விமான போக்குவரத்து துறை மீண்டு வருவதால் ,சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தில் 6600 காலிப்பணியிடங்கள் உள்ளன. வேலைவாய்ப்புகள் குறித்து சாங்கி ஏர்போர்ட் குரூப் (CAG) தனது இணையதளத்தில் (May 17) செவ்வாய்க்கிழமை அன்று தெரிவித்துள்ளது .

“சிங்கப்பூர் வணிக விமான போக்குவரத்துத் துறையில் பயண மீட்புக்கு தேவையான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு பெருமளவிலான பணியமர்த்தல் நோக்கமாக கொண்டுள்ளது ” என்று CAG தெரிவித்துள்ளது. மேலாளர், நிர்வாகி தொழில்நுட்ப மற்றும் PMET அல்லாத பதவிகளில் காலிப்பணியிடங்கள் உள்ளன.

Suntec City Convention மையத்தில் மே 27 முதல் மே 28 வரை நடைபெறும் One Aviation Careers Fair -ல் 20க்கும் மேற்பட்ட விமான நிறுவனங்கள் காலி பணியிடங்களுக்கான ஆன்சைட் நேர்காணல்களை நடத்தும். இதனைத் தொடர்ந்து வேலைக்கு தகுதியானவர்கள் உடனடியாக விண்ணப்பித்து நேர்காணல் செய்து பணியமர்த்த படலாம் என்று கூறியது.

புதிய பணியாளர்களை ஈர்ப்பதற்காக விமான நிலைய பங்குதாரர்கள் சம்பளம் மற்றும் ஊக்கத் தொகைகளை வழங்குகின்றனர். விமான நிலைய அவசர சேவைகள் மற்றும் இணைய பாதுகாப்பு அதிகாரிகள் போன்ற பதவிகளும் காலி பணியிடங்களில் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சாங்கி விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் விமான நிலையம் சீராக இயங்குவதை உறுதி செய்ய ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை தொடங்கி வைத்ததாக கடந்த மார்ச் மாதம் போக்குவரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரன் கூறினார்.