வேலைத் தேடுபவர்களுக்கு ஆறுதலை அளித்துள்ள மனிதவள அமைச்சகத்தின் அறிவிப்பு!

(Photo: Today)

சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2021- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மொத்தம் உள்ள காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 1,17,100 ஆகும். இது சிங்கப்பூரில் வேலையில்லாத 100 பேருக்கு 211 காலிப் பணியிடங்கள் என்ற விகிதத்தில் இருந்தது. குறிப்பாக, சிங்கப்பூரில் வேலையில்லாத ஒவ்வொரு நபருக்கும் இரண்டுக்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் கிடைக்கும் வகையில் இருந்தது.

சிங்கப்பூரில் தங்கும் விடுதியில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கு வரவுள்ள மாற்றங்கள் – முழு விவரம்!

கொரோனா சூழல் காரணமாக, பயணக் கட்டுப்பாடுகள் அமலில் இருந்தன. இதனால் வெளிநாட்டு ஊழியர்களின் வருகை குறைந்ததால் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு மிக முக்கிய காரணம் ஆகும். கொரோனா பெருந்தொற்றில் இருந்து பொருளாதாரம் மீட்சியடைந்து வரும் வேளையில், காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

மொத்தம் உள்ள காலிப் பணியிடங்களின் வெளிநாட்டு ஊழியர்களை அதிகம் நம்பியுள்ள உற்பத்தி, கட்டுமானத் துறை உள்ளிட்டத் துறைகளின் காலிப் பணியிடங்கள் 23% ஆகும். பயணக் கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்பட்டு வரும் நிலையில், சிங்கப்பூர்வாசி அல்லாதோரிடையே வேலை நியமனம் நடப்பாண்டு அதிகரிக்கும் என எதிர்பார்ப்படுகிறது. அதேபோல், வரும் நாட்களில் வெளிநாட்டு ஊழியர்களை அதிகம் சார்ந்திருக்கும் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பு உள்ளது” இவ்வாறு மனிதவள அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

குளியலறையில் ரகசிய கேமரா..மனைவியின் சகோதரிகள் குளிப்பதை வீடியோ எடுத்த ஆடவர் – குற்றச்சாட்டு!

சிங்கப்பூரில் கொரோனா பெருந்தொற்று காரணமாக, பலர் வேலை இழந்துள்ள இச்சூழலில் மனிதவள அமைச்சகத்தின் இத்தகைய அறிவிப்பு, வேலையில்லாதவர்களுக்கும், வேலைத் தேடுபவர்களுக்கும் சற்று ஆறுதலை அளித்துள்ளது.