வேலை அனுமதியின்கீழ் சிங்கப்பூர் வரும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு இது கட்டாயம் – செப்.1 முதல் அமல்

ஊழியர்களின் சம்பளத்தை
MOM

சிங்கப்பூரில் உள்ள நிறுவனங்கள், வேலை அனுமதியின்கீழ் வரும் வெளிநாட்டு ஊழியர்களின் தகுதிகளை சரிபார்ப்பது கட்டாயம்.

இந்த நடைமுறை வரும் செப். 1, முதல் இது நடப்புக்கு வரும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

அதில் எம்ப்ளாய்மென்ட் பாஸ் விண்ணப்பதாரர்களின் கல்வித் தகுதிகளை கண்டிப்பாக சரிபார்க்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கண்ட வேலை அனுமதியில் வெளிநாட்டினரை பணியமர்த்த விரும்பும் முதலாளிகள், அவர்களின் கல்வித் தகுதிகள் உண்மையானவை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

வெளிநாட்டு தொழில் வல்லுநர்கள், மேலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் சிங்கப்பூரில் பணியாற்ற EP பாஸ் அனுமதி வழங்குகிறது. அதன்கீழ் ஊழியர்கள் மாதம் குறைந்தபட்சம் S$5,000 சம்பாதிக்கின்றனர்.

மனிதவள அமைச்சரும், வர்த்தகம் மற்றும் தொழில்துறைக்கான இரண்டாவது அமைச்சருமான டான் சீ லெங், நேற்று மார்ச் 1 அன்று வழங்கல் குழு (COS) பேச்சுவார்த்தையில் உரையாற்றினார்.

அப்போது உண்மையான கல்வித் தகுதிகளைச் சமர்ப்பிப்பதன் மூலம் மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம் என்று கூறினார்.