வெளிநாட்டு ஊழியர்கள் அதிக அளவில் வேண்டும்… 6 நிறுவனங்களுக்கு சிறப்பு அனுமதி

migrant workers immigration-offenders
(Photo: Mothership)

பள்ளி பேருந்துகளை இயக்கும் நிறுவனங்கள் அதிக அளவில் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்கலாம் என்ற அனுமதி கடந்த ஜூன் மாதம் வெளியானது.

அதனை தொடர்ந்து தேர்தெடுக்கப்பட்ட 6 நிறுவனங்கள் அவ்வாறு செய்துகொள்ள அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

இந்திய ஊழியர் வாகனம் மோதி மரணம் – வேலையிடத்தில் நடந்த சோகம்

பேருந்து சேவைகளில் நிறுவனங்களின் பங்கு, அதே போல உள்ளூர் ஊழியர்களை வேலைக்கு எடுப்பதில் அவைகள் கொண்டுள்ள கட்டுப்பாடுகளின் அடிப்படையில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கல்வி அமைச்சின்கீழ் இயங்கக்கூடிய பள்ளிகளுடன் ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனங்களுக்கு மட்டும் அந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதாவது குறைந்தது 2 பள்ளிகளுடன் நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்திருக்க வேண்டும்.

எகிறும் செலவுகள் காரணமாக பேருந்து நிறுவனங்கள், பள்ளிகளுடனான தங்கள் ஒப்பந்தங்களை ரத்து செய்தது குறித்து முன்னர் நாம் செய்தி வெளியிட்டோம். இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அதிக அளவில் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

வரையறுக்கப்பட்ட நேரம் அடிப்படையில் அதிக வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்க அமைச்சு அப்போது அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

அனுமதி வழங்கப்பட்ட 6 நிறுவனங்கள் குறித்த விவரங்களை அமைச்சு வெளியிடவில்லை.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

iPhone கைப்பேசிகளை அபேஸ் செய்த வெளிநாட்டு ஊழியருக்கு சிறை

வெளிநாட்டு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்: அதிக அளவில் ஊழியர்களை வேலைக்கு எடுக்க பேருந்து நிறுவனங்களுக்கு அனுமதி