சிங்கப்பூர் – மலேசியா இ எல்லை திறக்கப்பட்டதால் கடைகளில் வியாபாரம் குறைவு – உட்லண்ட்ஸ் கடைக்காரர்கள் வருத்தம்

johor bahru malaysians returns johor from woodlands

உலக மக்களை அச்சுறுத்தி வந்த Covid-19 வைரஸ் தொற்று மற்றும் அதன் திரிபுகள் சர்வதேச நாடுகளுக்கிடையேயான எல்லைகளை மூடுவதற்கு வழிவகுத்தது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக வைரஸ் தொற்றின் அச்சுறுத்தலால் நாடுகளுக்கிடையேயான எல்லைகள் திறக்க படாமலேயே இருந்தன.சமீபத்தில் சிங்கப்பூர் – மலேசியா நாடுகளுக்கிடையேயான தரைவழி எல்லைகள் முழுமையாக திறக்கப்பட்டன.

இருநாடுகளுக்கு இடையேயான எல்லைகள் முழுமையாக திறக்கப்பட்டதை தொடர்ந்து மலேசியர்கள் பலர் ஜோகூர் பாருவிற்குத் திரும்பியுள்ளனர் .இதனால் உணவகங்களின் வருவாய் 30 விழுக்காடு சரிந்துள்ளதாக உணவக உரிமையாளர்களும் சில்லறை விற்பனையாளர்களும் தெரிவித்துள்ளனர்.

எல்லைகள் திறக்கப்பட்ட பின் ஜோகோருக்கு திரும்பியவர்களில் பெரும்பாலானோர் மலேசியர்கள் ஆவர். Tuas Second Link பாலம் மற்றும் உட்லண்ட்ஸ் கடற்பாலம் வழியாக அதிக அளவிலான மலேசியர்கள் எல்லையை கடந்திருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

எதிர்வரும் மாதங்களில் மலேசிய ஊழியர்கள் அன்றாடம் சிங்கப்பூருக்கு வந்து செல்லும் போது வியாபாரம் பெருகும் என்று உணவக உரிமையாளர்கள் மற்றும் கடைக்காரர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். 80 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் சிங்கப்பூரில் இருந்து ஜோகோருக்கு புறப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

இரண்டு வருடங்களுக்குப் பிறகு எல்லைகள் முழுமையாக மீண்டும் திறக்கப்பட்டதால் கிட்டத்தட்ட 33700 பேர் சிங்கப்பூர்-மலேசியா எல்லைகளுக்கு இடையே பயணம் செய்துள்ளனர். எது எப்படியோ! covid-19 கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதை தொடர்ந்து நாடுகளின் பொருளாதாரம் மீட்சியடைந்து வருவது குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களில் ஒன்றாகும்.