ஜோகூர் பாரு நெடுஞ்சாலை விபத்தில் இளைஞர் உயிரிழப்பு!

Photo: Sin Mah Bike Towing

 

மலேசியாவில் உள்ள ஜோகூர் பாருவில் ஈஸ்டர்ன் டிஸ்பர்சல் லிங்க் (Eastern Dispersal Link) என்ற நெடுஞ்சாலையில் இருக்கும் மேம்பாலச் சாலையில், சிங்கப்பூர் பதிவெண் கொண்ட இரண்டு சக்கர வாகனத்தில் 22 வயதான இளைஞர், சிங்கப்பூருக்கு நேற்று (ஜூன் 25) இரவு திரும்பிக் கொண்டிருந்தார்.

‘ஹவ்காங் அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து’- குடியிருப்பாளர்களைக் காப்பாற்ற உதவியர் மருத்துவமனையில் அனுமதி!

அப்போது, ஜோகூர் சுங்கச்சாவடி நோக்கி அதிவேகமாக சென்றுக் கொண்டிருந்த அந்த நபர், இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததால், மேம்பாலச் சுவரின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், அந்த இளைஞர் தூக்கி வீசப்பட்டார். விபத்தில் இருசக்கர வாகனம் பல மீட்டர் தொலைவுக்கு சறுக்கி இழுத்துச் சென்றுள்ளது.

இந்த விபத்து நள்ளிரவு 02.00 AM மணிக்கு நடைபெற்ற நிலையில், விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அத்துடன், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதிவேகமாக, இருசக்கர வாகனத்தில் சென்றதே விபத்துக்கு காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்ரீ சிவன் கோயிலில் பிரதோஷப் பூஜை!

விபத்து குறித்த தகவலை முதலில் வாகனங்களை இழுத்துச் செல்லும் நிறுவனமான ‘Sin Mah Bike Towing’ தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது.