ஜோகூரில் வரலாறு காணாத மழை – ஒரே நாளில் 100 மிமீ மழை பதிவு !

johor flood

ஆகஸ்ட் 2, 2022 அன்று பெய்த கனமழையில் ஜோகூர் பாரு நகரம் முழுவதும் திடீர் வெள்ளத்தால் மூழ்கியது. இதில் பல முக்கிய சாலைகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. கடந்த 10 ஆண்டுகளில் ஜோகூரில் ஏற்பட்ட மோசமான பெறுவெள்ளம் இதுவாகும். ஜோகூர் முதல்வர் ஓன் ஹபீஸ் காஸி, ஆகஸ்ட் 2 – ஜோகூர் குடிமக்களை சோதித்த தினம் என்று தன் பேஸ்புக் பக்கதில் கூறியுள்ளார்.

வழக்கமான மழைப்பொழிவு 10 மிமீ முதல் 20 மிமீ வரை இருக்கும் நிகையில் ஒரு மணி நேரத்திற்குள் 100 மிமீ வரை மழை பெய்தது. அதாவது 100 மிமீ என்பது பிப்ரவரியில் சிங்கப்பூரில் ஒரு மாதம் பெய்யும் மழையின் அளவாகும். ஆகஸ்டு 2, மதியம் 2:30 மணியளவில் வெள்ள நீர் முழுமையாக வடிந்தது.

எதிர்காலத்தில் பெறுவெள்ளம் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கைகளை எடுக்குமாறு உள்ளூர் அதிகாரிகளுக்கும், பொதுப்பணி, போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்புக் குழுத் தலைவர்களுக்கும் அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.