சிங்கப்பூர் பிரதமரின் அழைப்பை ஏற்ற ஜோஹோர் சுல்தான் – இஸ்தானாவில் கௌரவப் பட்டமளிக்கும் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம்

istana-open-house-cny
Pic: File/Today

ஜூலை 20-ஆம் தேதியன்று ஜோஹோர் சுல்தான் Ibrahim Ibni Almarhum Sultan Iskandar சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங்கின் அழைப்பை ஏற்று 3 நாள் பயணம் மேற்கொள்கிறார்.இஸ்தானாவில் உபசரிப்பு மற்றும் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

அதிபர் ஹலிமா யாகோபும் அவரது கணவரும் தேநீர் உபசரிப்பில் ஜோஹோர் சுல்தானுடன் கலந்துகொள்வார்கள்.பிரதமர் லீ மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் அவர்களுடன் மதிய உணவு விருந்தில் கலந்துகொள்வர்.

இந்நிகழ்ச்சியின் போது சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் ஜோஹோர் சுல்தான் இப்ராஹிம்முக்குச் சட்டத்துறையில் கௌரவப் பட்டத்தை வழங்கவிருக்கிறது.இதன்மூலம் சிங்கப்பூருக்கும் ஜோஹோருக்கும் இடையிலான உறவு வலுப்படுத்தப்படும்.

சிங்கப்பூரின் மூத்த அமைச்சரும் தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமானTeo Chee Hean மற்றும் ஓய்வு பெற்ற மூத்த அமைச்சர் Goh Chok Tong ஆகிய இருவரையும் ஜோஹோர் சுல்தான் சந்திப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் சிங்கப்பூரிலுள்ள Yusof Ishak கல்விக்கழகம்,ஜோஹோர்-சிங்கப்பூர் இடையேயான விரைவு ரயில் அமைப்பின் உட்லாண்ட்ஸ் நார்த் நிலையம் ,செம்பாவாங் விமானப்படைத் தளம் ஆகிய இடங்களுக்கும் சுல்தான் இப்ராஹிம் செல்வார் என்று கூறப்படுகிறது.