பெண்ணின் தொடை,பிறப்புறுப்பு பகுதியில் சிந்திய சூடான சோயா பால்! – விற்பனையகத்தின் மோசமான எதிர்வினை

jollibean-cup-scalded-soya-bean-hot
சிங்கப்பூரில் 34 வயதான பெண் ஒருவர் ஜோலிபியனிலிருந்து சூடான சோயா பாலை வாங்கியுள்ளார்.வாங்கிய பாலை வைத்திருந்த கோப்பை நொடிந்து அவரது தொடை மற்றும் இடுப்புப் பகுதியில் கடுமையான சூடுபட்டது.
கொதித்த பால் தோலின் மீது பட்டது மோசமான வலியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் அவருக்கு நடந்து மூன்று மாதங்களுக்கும் மேலாகிவிட்டது. இருப்பினும் காயங்களினால் ஏற்பட்ட வடுக்கள் இன்னும் தொடைப் பகுதியில் உள்ளது.

கோப்பையில் சூடாக இருந்த பாலில் மூன்றில் ஒரு பகுதி அந்தப் பெண்ணின் தொடைகள்,இடுப்பு மற்றும் பிறப்புறுப்புப் பகுதியில் கொட்டியது.அவர் காரில் அமர்ந்த நிலையில் இருந்ததால் முறையான முதல் கட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியாமல் இரண்டாம் நிலை தீக்காயங்களுக்கு ஆளானார்.
சோயா பீன் பால் பரிமாறும் போது மிகவும் சூடாக இருந்ததால் கோப்பை அதன் வடிவத்தை இழந்திருக்கும் என்று சந்தேகிப்பதாகவும் அவர் கூறினார்.80 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சோயா பால் இருந்ததாகக் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் நிறுவனத்தின் காப்பீடு ஏற்கனவே செலவுகளை ஈடுசெய்துவிட்டதால்,ஜொலிபீனிடம் இருந்து மருத்துவக் கட்டணத்தைச் செலுத்துமாறு கேட்கவில்லை என்று அவர் விளக்கினார்.
அவருக்கு ஏற்பட்ட விபத்துக்கு பின்னர் ஜொலிபீனின் நடைமுறைகள் மேம்படுத்தப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்க சில சமயங்களில் விற்பனை நிலையத்திற்கு சென்று வந்தார்.மே 30 அன்று, அந்தப் பெண்ணும் அவரது கணவரும் அதே கப் சோயா பாலை வாங்கி, அதன் வெப்பநிலையை அளந்த போது 80 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருப்பதைக் கண்டறிந்தனர்.
சூடான பானங்களுக்கான சிறந்த சேவை வெப்பநிலை 54 ° C முதல் 71 ° C வரை இருப்பது சிறந்தது.இறுதியாக ஜொலிபீன் நிறுவனம் சுருக்கமான “டெம்ப்ளேட் மன்னிப்பு” அனுப்பியது ,அவர் தீக்காயத்தை அனுபவித்த வேதனையுடன் ஒத்துப்போகவில்லை என்று கூறினார்.