Jollibeeயின் peach mango pie பிரியர்கள், இந்த இனிப்பு வகை சிங்கப்பூருக்கு வந்தடைந்ததை அறிந்தால் பெருமகிழ்ச்சி அடைவார்கள். அந்நிறுவனம் அதன் சமூக ஊடக சேனல்கள் மூலம் ஆகஸ்ட் 5, 2022 அன்று இதை அறிவித்துள்ளது.
இது அனைத்து Jollibee விற்பனை நிலையங்களிலும் S$1.80 முதல் விற்கப்பட உள்ளது. மேலும் GrabFood மூலம் டெலிவரிசெய்யவும் படுகிறது.
இந்த pie, பீச் மற்றும் மாம்பழங்களால் நிரப்பப்பட்டு மிருதுவான மற்றும் மெல்லிய மேலோடுகளால் மூடப்பட்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த pie க்கு அதற்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சிலர் இது Jollibeeயில் வெளியிடப்பட்ட உணவுகளில் தங்களுக்கு பிடித்த உணவு என்றும் கூறுகிறார்கள்.