மரம் நட்ட அதிபர்! – ஆசியான் உறுப்பு நாடாக இணைய சிங்கப்பூரின் ஆதரவை உறுதிப்படுத்திய பிரதமர்!

timor leste istana asean meet

சிங்கப்பூருக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்ட திமோர் லெஸ்டேயின் அதிபர் ஹோசே ராமோஸ்-ஹொர்த்தா இஸ்தானாவில் பிரதமர் லீ சியென் லூங்ககைச் சந்தித்து பேசியுள்ளார்.பிரதமர் தனது முகநூல் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அந்நாடு ஆசியான் அமைப்பின் உறுப்பினராக இணைவதற்கு கொள்கை அளவில் ஒப்புதல் பெற்றுள்ளது.ASEAN அமைப்பில் உறுப்பு நாடாக இணைவதற்கு சிங்கப்பூரின் ஆதரவைப் பிரதமர் லீ மறுவுறுதிப்படுத்தினார். சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோபையும் திரு. ராமோஸ்-ஹொர்த்தா சந்தித்துப் பேசினார்.

சிங்கப்பூருக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவருக்கு இஸ்தானாவில் உத்தியோகப்பூர்வ வரவேற்புடன் விருந்து உபசரிக்கப்பட்டது.விருந்து நிகழ்ச்சிக்குப் பின்னர்,திமோர் லெஸ்டே கண்டுள்ள சமுதாய, பொருளாதார முன்னேற்றங்கள் குறித்து இருவரும் கலந்து பேசினர்.

நிகழ்ச்சியில் ஆர்க்கிட் மலர் ஒன்றுக்கு அதிபர் ராமோஸ்-ஹொர்த்தாவின் பெயர் சூட்டப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையேயான 20 ஆண்டு அரசு உறவை அனுசரிக்கும் விதமாக அவர் மரம் ஒன்றையும் நட்டார்.

அதிபர் ஹோசே முதல் அரசுமுறைப்பயணமாக சிங்கப்பூர் வருகை தந்துள்ளார்.அவர் வரும் ஞாயிற்றுக்கிழமை (11 டிசம்பர்) வரை சிங்கப்பூரில் இருப்பார் என்று தகவல்கள் கூறுகின்றன.