இறுதியில் தர்மமே வெல்லும்! – 41 வருடம் கழித்து சிறைத்தண்டனை பெற்ற 72 வயதான குற்றவாளி

சிங்கப்பூரில் 1981-ஆம் ஆண்டு பெண்ணைத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சின் ஷெயொங் ஹொன் என்பவருக்கு 41 வருடங்கள் கழித்து இன்று தண்டனை விதிக்கப்பட்டது.அவர் செய்த குற்றங்களுக்காக நீதிமன்றம் 18 வருடச் சிறைத் தண்டனையை விதித்துள்ளது.

தற்போது குற்றவாளிக்கு வயது 72.அவர் இரண்டு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.சின் 1981ஆம் ஆண்டில் பல்வேறு திருட்டுச் செயல்களில் ஈடுபட்டதாகவும், 92,000 வெள்ளிக்கு ஒரு பெண்ணைச் சுட்டதாகவும் தெரியவந்துள்ளது.

அந்தச் சம்பவங்களுக்குப் பிறகு சிங்கப்பூரிலிருந்து வெளியேறிய சின்,தாய்லாந்திற்கு தப்பியோடினார்.மீண்டும் சிங்கப்பூருக்கு 2013-ஆம் ஆண்டு திரும்பினார்.குற்றச் செயலில் ஈடுபட்டதற்காக தண்டனையை விதிக்க 2015இல் விசாரணை நடத்திய போது அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என நீதிமன்றம் கண்டறிந்தது.

பின்னர்,கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் அவர் குற்றத்தை ஒப்புக்கொள்ளும் மனநிலையில் இருப்பது தெரிய வந்தது.சிங்கப்பூர் இடைவழிப் பேருந்தின் தலைமைக் காசாளரை துப்பாக்கி வைத்து மிரட்டி அவரிடமிருந்த 6,000 வெள்ளியை சின் வழிப்பறி செய்தது முதல் கொள்ளைச் சம்பவம் ஆகும்.

இரண்டாவது சம்பவமாக 92,000 வெள்ளி மதிப்புள்ள பணத்தையும் காசோலையையும் வைத்திருந்த பெண்மணியை சுட்டுப் பணத்தைக் கொள்ளையடித்து அந்த இடத்தைவிட்டுத் தப்பியோடினார்.

பாதிக்கப்பட்ட பெண் பல காயங்களுடன் உயிர்தப்பினார்.சின் ஒன்பதரை ஆண்டுகளாகத் தடுப்புகாவலில் இருந்ததைக் கருத்தில் கொண்டு நீதிபதி அவருக்கு ஆயுள்தண்டனை விதிக்கவில்லை. மேலும் அவருக்கு 6 ஆண்டுகள் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.