ஜூலை 31- ஆம் தேதி அன்று ஸ்ரீ காளியம்மனுக்கு பால்குட அபிஷேகம்!

Photo: Sri Vairavimada Kaliamman Temple Official Website

சிங்கப்பூரில் பிரசித்திப் பெற்ற கோயில்களில் ஒன்று ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயில் (Sri Vairavimada Kaliamman Temple). இக்கோயில் 2001 டோவா பயோஹ் லோரோங் 8- ல் (Toa Payoh Lorong) அமைந்துள்ளது. நாள்தோறும் 100- க்கும் மேற்பட்ட பக்தர்கள் இங்கு வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். விஷேச நாட்களில் இக்கோயிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகளும் நடைபெற்று வருகிறது.

விமானத்தில் வழங்கப்பட்ட “பாம்பு தலை” உணவு (Video) – அதிர்ச்சியில் விமான பயணிகள்

இந்த நிலையில், வரும் ஜூலை 31- ஆம் தேதி அன்று ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில் ஸ்ரீ காளியம்மனுக்கு பால்குட அபிஷேகம் நடைபெறும் என்று இந்து அறக்கட்டளை வாரியம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, இந்து அறக்கட்டளை வாரியம் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “வரும் ஜூலை 31- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று ஸ்ரீ காளியம்மனுக்கு பால்குட அபிஷேகம் நடைபெறவுள்ளது. இந்நாளில் அபிஷேகப் பொருட்களை நேர்த்திக் கடனாக செலுத்த, பக்தர்கள் கோயிலில் வாங்கிக் கொள்ளலாம். ஜூலை 31- ஆம் தேதி அன்று காலை 09.00 மணி முதல் பால்குடம் செலுத்த விரும்புவோர், சீட்டுகளை கோயில் அலுவலகத்தில் இருந்து வாங்கிக் கொள்ளலாம்.

முடக்குவாதத்தில் முடங்கி இருப்பவரை தாக்கிய ஆடவர்; சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்

கோயிலில் தயாரித்து வைத்திருக்கும் பால் குடங்கள் மட்டுமே பக்தர்கள் நேர்த்திக் கடனாக செலுத்த முடியும். கோயில் வளாகத்தில் அனைத்து நேரங்களிலும் பக்தர்கள் தங்களது முகக்கவசத்தை அணிந்திருக்க வேண்டும். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு கோயில் நிர்வாகத்தின் 62595238 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.