ஜூலை 31- ஆம் தேதி அன்று ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் ஸ்ரீ பெரியாச்சி அம்மன் பூஜை!

Photo: Hindu Endowments Board Official Facebook Page

சிங்கப்பூரில் உள்ள பிரசித்திப் பெற்ற கோயில்களில் ஒன்று ஸ்ரீ மாரியம்மன் கோயில் (Sri Mariamman Temple). இந்த கோயில் 244 சவுத் பிரிட்ஜ் சாலையில் (244 South Bridge Road) அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆடி மாதம் தொடங்கியது முதலே சுவாமி விஷேச பூஜைகள், அலங்காரங்கள் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்தியாவின் FDI-யில் 27.01 சதவீத பங்களிப்போடு சிங்கப்பூர் முதலிடம் – அந்நிய முதலீட்டின் வளர்ச்சி

அந்த வகையில், வரும் ஜூலை 31- ஆம் தேதி அன்று ஞாயிற்றுக்கிழமை அன்று ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் ஸ்ரீ பெரியாச்சி அம்மன் பூஜை நடைபெறவுள்ளது. அதன்படி, ஜூலை 31- ஆம் தேதி அன்று காலை 10.00 மணிக்கு, பக்தர்கள் ஸ்ரீ பெரியாச்சி அம்மன் பூச்சொரிதல் விழாவில் கலந்துக் கொள்ளலாம். இதற்கான சீட்டுகளை கோயில் அலுவலகத்தில் இருந்து வாங்கிக் கொள்ளலாம்.

அன்று மாலை அர்ச்சனைகள் அல்லது முன்பதிவு செய்யப்பட்ட வழிபாட்டுச் சேவைகள் இடம் பெறாது. கோயில் வளாகத்தில் இருந்து பக்தர்கள் சிறப்பு வழிபாட்டு பூஜைகளைப் பார்வையிடலாம். மாலை 06.05 மணிக்கு ஸ்ரீ மாரியம்மன் கரகம் தயாரித்தல், கோயிலுக்குள் ஸ்ரீ மாரியம்மன் கரக ஊர்வலம் நடைபெறும். இரவு 07.15 மணிக்கு மாலை பூஜையும், இரவு 08.00 மணிக்கு பாளை சுக்குமாத்தடி ஊர்வலமும், இரவு 08.30 மணிக்கு ஸ்ரீ பெரியாச்சி அம்மனுக்கு அக்கினி கப்பறையும் நடைபெறும்.

“காணாமல் போன 71 வயது நபர் கண்டுபிடிக்கப்பட்டார்”- சிங்கப்பூர் காவல்துறை தகவல்!

இரவு 09.00 மணிக்கு சிறப்பு பெரியாச்சி பூஜையும், இரவு 09.15 மணிக்கு பிரசாதம் விநியோகமும் நடைபெறும். கோயில் வளாகத்தில் பக்தர்கள் எந்நேரமும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். பூஜைகளின் நேரலையை மாலை 06.05 மணி முதல் https://heb.org.sg/ என்ற இணையப் பக்கத்தில் காணலாம். கூடுதல் விவரங்களுக்கு, 62234064 என்ற கோயில் அலுவலகத்தின் தொலைபேசி எண்ணை தொடர்புக் கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை இந்து அறக்கட்டளை வாரியம் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.