இம்மாத இறுதியில் இடியுடன் கூடிய மழையை எதிர்பார்க்கலாம் – சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையம்

rain in singapore

மிகவும் வறண்ட மாதமாக இம்மாதம் இருந்து வரும் நிலையில் முதல் இரண்டு வாரங்களில் சராசரிக்கும் குறைவான மழைப்பொழிவு பதிவாகியுள்ளது என்று சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையம் (MSS) கூறியுள்ளது. மேலும் மாதத்தின் இரண்டாம் பாதியில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிலவும் தென்மேற்குப் பருவமழை, சிங்கப்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தென்கிழக்கு அல்லது தென்மேற்கில் இருந்து வீசும் குறைந்த அளவிலான காற்றுடன்  நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூலை இரண்டாம் பாதியின் முதல் சில நாட்களில் பெப்பத்தை உணரலாம் என்றும் மாதத்தின் மீதமுள்ள நாட்களில் அதிக மழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காற்றின் வேகம் மற்றும் நிலப் பகுதிகளின் வலுவான பகல்நேர வெப்பம் காரணமாக சில நாட்களில் இடியுடன் கூடிய மழை இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் சுமத்ரா சூறாவளி காரணமாக தீவு முழுவதும் அவ்வப்போது பலத்த காற்று மற்றும்  இடியுடன் கூடிய மழையை சில நாட்களில் விடியற்காலை மற்றும் காலை வேளைகளில் எதிர்பார்க்கலாம் என்றும் MSS கூறியுள்ளது.

பெரும்பாலான நாட்களில் தினசரி வெப்பநிலை 24°C முதல் 33°C வரை இருக்கும் என்றும் சில மழை நாட்களில், வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் வரை குறையலாம் என்றும் தென்கிழக்கு கடலில் இருந்து நிலத்தை நோக்கி ஈரமான காற்று வீசும்போது 28°C வரை  சூடான மற்றும் ஈரப்பதமான இரவுகளை எதிர்பார்க்கலாம் என்றும் MSS கூறியுள்ளது.