ஜூலை 11- ஆம் தேதி அன்று ஸ்ரீ சிவன் கோயிலில் பிரதோஷ பூஜை!

Photo: Sri Sivan Temple

சிங்கப்பூரில் உள்ள கோயில்களில் மிகவும் பிரசித்திப் பெற்றது ஸ்ரீ சிவன் கோயில் (Sri Sivan Temple). இக்கோயில் கெய்லாங் ஈஸ்ட் அவென்யூ 2- ல் (24 Geylang East Avenue 2) அமைந்துள்ளது. இந்த கோயில் இந்து அறக்கட்டளை வாரியத்தின் கீழ் உள்ளது.

மெக்காவிற்கு பாதுகாப்பாக சென்ற சிங்கப்பூர் இஸ்லாமியர்கள் – சவூதி அரேபியாவில் அனுமதிக்கப்பட்டார்களா?

இந்த நிலையில், இந்து அறக்கட்டளை வாரியத்தின் (Hindu Endowments Board) அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “ஜூலை 11- ஆம் தேதி திங்கள்கிழமை அன்று ஸ்ரீ சிவன் கோயிலில் பிரதோஷ பூஜை நடைபெறவுள்ளது. இந்த பிரதோஷ நாளில் மாலை 04.20 மணி முதல் மாலை 05.45 மணி வரை, எந்நேரமும் 200 பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர்.

அபிஷேகப் பொருட்களுக்கும், வில்வ அர்ச்சனைக்கும் பக்தர்கள் http://sst.org.sg/TermArchanai/BookTermarchanai .என்ற இணையப் பக்கத்தில் பதிவுச் செய்யலாம். உங்கள் பெயர்களில் கோயில் அர்ச்சகர்கள் அபிஷேகப் பொருட்களும் மற்றும் வில்வ அர்ச்சனையையும் செலுத்திவிடுவார்கள். பக்தர்கள் கோயிலில் அமர்ந்து பிரதோஷ பூஜையைப் பார்க்க முடியும்.

சிங்கப்பூர் சிறையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றம்!

கோயில் வளாகத்தில் அனைத்து நேரங்களிலும் பக்தர்கள் தங்களது முகக்கவசத்தைக் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். இந்த மாற்றங்களின் தொடர்பில் உங்களது ஒத்துழைப்பையும், புரிந்துணர்வையும் நாடுகிறோம். மேல் விவரங்களுக்கு, 67434566 என்ற கோயிலின் அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்புக் கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.