ஜூன் 26- ஆம் தேதி அன்று ஸ்ரீ சிவன் கோயிலில் பிரதோஷ பூஜை!

Photo: Sri Sivan Temple

சிங்கப்பூரில் உள்ள கோயில்களில் மிகவும் பிரசித்திப் பெற்றது ஸ்ரீ சிவன் கோயில் (Sri Sivan Temple). இக்கோயில் 24 கெய்லாங் ஈஸ்ட் அவென்யூ 2- ல் (24 Geyland East Avenue 2) அமைந்துள்ளது. இக்கோயிலில் விஷேச நாட்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேசங்கள் நடைபெறுவது வழக்கம். நாள்தோறும் 100- க்கும் மேற்பட்ட பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இக்கோயில் இந்து அறக்கட்டளை வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நிலை என்ன? – சிங்கப்பூரில் இப்படியெல்லாமா நடக்குது!!

இந்த நிலையில், இந்து அறக்கட்டளை வாரியம் (Hindu Endowments Board) தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “வரும் ஜூன் 26- ஆம் தேதி அன்று ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ சிவன் கோயிலில் பிரதோஷ பூஜை நடைபெறவுள்ளது. ஜூன் 26- ஆம் தேதி மாலை 04.20 மணி முதல் 05.45 மணி வரை, எந்நேரமும் 200 பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர்.

அபிஷேகப் பொருட்களுக்கும், வில்வ அர்ச்சனைக்கும் பக்தர்கள் http://sst.org.sg/என்ற இணையப் பக்கத்தில் பதிவு செய்யலாம். உங்கள் பெயர்களில் கோயில் அர்ச்சகர்கள் அபிஷேகப் பொருட்களும் மற்றும் வில்வ அர்ச்சனையைச் செலுத்திவிடுவார்கள். பக்தர்கள் கோயிலில் அமர்ந்து பிரதோஷ பூஜையைப் பார்க்க முடியும். கோயில் வளாகத்தில் அனைத்து நேரங்களிலும் பக்தர்கள் தங்களது முகக்கவசத்தை அணிந்திருக்க வேண்டும்.

இப்படியே போனால் ரொம்ப கஷ்டம் – வெளிநாட்டு ஊழியர்கள் விடுதிக்கு வெளியே செல்லவதில் புதிய நடைமுறை!

இந்த மாற்றங்களின் தொடர்பில் உங்களது ஒத்துழைப்பையும், புரிந்துணர்வையும் நாடுகிறோம். மேல் விவரங்களுக்கு, 67434566 என்ற கோயிலின் அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்புக் கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.