இந்த நாளில் சிங்கப்பூர்- மலேசியா நிலவழி எல்லைகளில் போக்குவரத்து நெரிசல் இருக்கக் கூடும் என தகவல்!

இந்த நாளில் சிங்கப்பூர்- மலேசியா நிலவழி எல்லைகளில் போக்குவரத்து நெரிசல் இருக்கக் கூடும் என தகவல்!
Video Crop Image

 

பக்ரீத் பண்டிகை எனப்படும் ஹஜ்ஜுப் பெருநாள் சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் வரும் ஜூன் 29- ஆம் தேதி வியாழன்கிழமை அன்று கொண்டாடப்படவிருக்கிறது. அன்றைய தினம் அரசு விடுமுறையாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜோகூர் பாரு நெடுஞ்சாலை விபத்தில் இளைஞர் உயிரிழப்பு!

இந்த நிலையில் ஜூன் 28- ஆம் தேதி புதன்கிழமை அன்று மதியம் முதல் சிங்கப்பூர்- மலேசியா நாடுகளின் நிலவழி எல்லைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கக் கூடும் என குடிநுழைவுச் சோதனைச் சாவடிகள் ஆணையம் தெரிவித்துள்ளது. அத்துடன், உச்ச நேரங்களில் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் வாகனம் ஓட்டிகள் காத்திருக்க வேண்டியிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 28- ஆம் தேதி முதல் ஜூலை 3- ஆம் தேதி வரை உட்லண்ட்ஸ் மற்றும் துவாஸ் சோதனைச் சாவடிகளில் நெரிசல் இருக்கும் என்றும் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

அரசு விடுமுறை நாட்களில், சிங்கப்பூரில் இருப்பவர்கள் மலேசியாவுக்கும், மலேசியாவில் இருப்பவர்கள் சிங்கப்பூருக்கும் பயணம் மேற்கொள்வது வழக்கமான ஒன்று என்ற போதிலும், மிகுந்த போக்குவரத்து நெரிசல் போன்றவை வாகனம் ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘ஹவ்காங் அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து’- குடியிருப்பாளர்களைக் காப்பாற்ற உதவியர் மருத்துவமனையில் அனுமதி!

எனினும், இருநாடுகளிலும் பொழுதுப்போக்கு இடங்களில் கூட்டம் நிரம்பியிருக்கும் என்றால் மிகையாகாது.