அடைமழைப் பெய்தாலும் அசராமல் நின்ற மக்கள்! – ஜூரோங் பறவைகள் பூங்காவில் திரண்ட பார்வையாளர்கள்!

Pic: Roslan RAHMAN/AFP

சிங்கப்பூரில் உள்ள ஜூரோங் பறவைப் பூங்கா இன்று (3 ஜனவரி) மூடப்படுகிறது.52 ஆண்டுகள் பழமையான பூங்காவிற்கு பிரியாவிடை அளிக்க மக்கள் பலரும் அங்கு திரண்டனர்.பூங்காவில் திறந்தவெளியில் மக்கள் குவிந்தனர்.அப்போது மழை பெய்தது.ஆனால்,அவர்கள் மழையைப் பொருட்படுத்தாது அங்கு நின்றிருந்தனர்.

பூங்காவில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.அவற்றில் kings of the skies என்ற நிகழ்ச்சி மாலை 4 மணிக்கு நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் பருந்துகள்,கழுகுகள் எப்படி இரைதேடும் என்பது எடுத்துக்காட்டப்பட்டது.நிகழ்ச்சியானது திறந்தவெளியில் நடைபெற்றது.

நிகழ்ச்சித் தொடங்கிய சிறிது நேரத்திலேயே மழை பெய்ய ஆரம்பித்தது.மழை பெய்தாலும் இறுதியாக நடைபெறும் நிகழ்ச்சியைப் பார்த்தே ஆக வேண்டும் என்று பார்வையாளர்கள் உறுதியாக இருந்தனர். அவர்கள் யாரும் அங்கிருந்து வெளியேறவில்லை.

அனைவரும் குடையை வெளியே எடுத்தனர். கனமழை பெய்யத் தொடங்கியது.ஆனால்,பறவைகளின் பயிற்சியாளர்களும் தொடர்ந்து நிகழ்ச்சியை நடத்தினர் . பொறுமையுடன் நிகழ்ச்சியைக் கண்டுகளித்த மக்கள் நிகழ்ச்சியை ரத்துசெய்யவேண்டிய நிலை ஏற்பட்ட பிறகே அங்கிருந்து வெளியேறியதாகக் கூறப்படுகிறது.