ஜூரோங் ரயில் பாதையில் நீல நிற ரயில்கள்!

Photo: Land Transport Authority

 

சிங்கப்பூரில் உள்ள ஜூரோங் பகுதியில் ரயில் பாதைக்கான புதிய ரயில்கள் குறித்த தகவலை சிங்கப்பூரின் நிலப் போக்குவரத்து ஆணையம் (Land Transport Authority- ‘LTA’) தெரிவித்துள்ளது.

 

அதன்படி, ஜுரோங் பிராந்திய பாதை (Jurong Region Line- ‘JRL’) சிங்கப்பூரின் ஏழாவது எம்.ஆர்.டி வரிசையாக இருக்கும். பூன் லே (Boon Lay), சோவா சூ காங் (Choa Chu Kang) மற்றும் ஜுரோங் ஈஸ்ட் எம்ஆர்டி நிலையங்களில் ( Jurong East MRT stations) மூன்று பரிமாற்ற நிலையங்கள் உட்பட, தற்போதுள்ள நெட்வொர்க்கில் 24 நிலையங்களை ஜேஆர்எல் சேர்க்கும்.

 

ஜூரோங் சுற்றுவட்டாரத்தில் உள்ள பயணிகள் தங்கள் இல்லத்தில் இருந்து 10 நிமிடங்களில் ரயில் நிலையங்களை வந்தடையும் வகையில், அருகில் ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது. மேலும் ரயில் நெட்வொர்க்குடன் நேரடி தொடர்பு இல்லாத பகுதிகளான நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (Nanyang Technological University- NTU’), ஜுரோங் தொழில்துறை எஸ்டேட் (Jurong Industrial Estate), ஜுரோங் புதுமை மாவட்டம் (Jurong Innovation District), பாண்டன் நீர்த்தேக்கம் (Pandan Reservoir) மற்றும் எதிர்கால தெங்கா பகுதி (Tengah Area) போன்றவற்றுக்கும் ரயில் சேவை வழங்கப்பட உள்ளது.

 

2027- ஆம் ஆண்டு முதல் சேவையைத் தொடங்கவிருக்கும் அந்த ரயில்கள், நீல நிறத்தில் இருக்கும். மூன்று பெட்டிகள் கொண்ட 62 ரயில்கள் அறிமுகம் செய்யப்படும் என்று நில போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

 

ரயில்களின் இருக்கை நிறம், தரை வடிவமைப்பு, தகவல் பலகை ஆகியவை பற்றி பொதுமக்கள் தங்கள் கருத்துகளை Go.gov.sg/JRLTrainSurvey இணையதளம் மூலம் என்ற தெரிவிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இருப்பினும், கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்த புதிய ரயில் சேவை தொடங்குவதில் ஒரு வருட காலத்திற்கு காலதாமதமாகும் என்று கூறப்படுகிறது.