ஜூரோங் வெஸ்ட் அடுக்குமாடி குடியிருப்பில் தீ: ஐந்து பேர் மருத்துவமனையில் அனுமதி

SCDF

ஜூரோங் வெஸ்ட் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தை அடுத்து, ஆறு குடியிருப்பாளர்களில் ஐந்து பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

இன்று புதன்கிழமை (ஜனவரி 19) காலை சார்ஜ் செய்யப்பட்ட மின்சார சைக்கிள் பேட்டரியால் தீ விபத்து விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

OCBC வங்கியின் மற்றொரு வாடிக்கையாளருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம் – 2 மணிநேரத்தில் வாழ்நாள் சேமிப்பு S$500,000 ஐ இழந்த சோகம்

காலை 6.10 மணியளவில் பிளாக் 723 ஜூரோங் வெஸ்ட் அவென்யூ 5ல் ஏற்பட்ட தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) முகநூல் பதிவில் தெரிவித்துள்ளது.

தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தபோது, ​​மூன்றாவது மாடியில் உள்ள வீட்டின் உள்ளே தீ பற்றி எரிந்ததைக் கண்டனர்.

அதன் ஆறு குடியிருப்பாளர்கள் தற்காப்புப் படையினர் வருவதற்கு முன்பே வெளியேற்றப்பட்டனர், அதே போல அண்டை அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் 45 குடியிருப்பாளர்களும் வெளியேற்றப்பட்டனர்.

அந்த வீட்டில் இருந்த ஐந்து பேர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக SCDF கூறியது. மற்ற காயங்கள் குறித்து எதுவும் பதிவு செய்யப்படவில்லை.

விசாரணைகள் நடந்து வருகின்றன.

சாங்கி விமான நிலையத்தின் 2ம் மற்றும் 4ம் முனையங்கள் எப்போது திறக்கப்படும்?