தமிழ்நாட்டில் தன் சொந்த ஊருக்கு வருகை தந்த சிங்கப்பூர் உள்துறை அமைச்சர்.. எதற்காக தெரியுமா?

(Photo : REUTERS)

சிங்கப்பூரில் சட்ட, உள்துறை அமைச்சர் காசிவிசுவநாதன் சண்முகம், அவரின் சொந்த ஊரில் நடந்த கோவில் திருவிழாவில் கலந்துகொண்டு சிறப்பித்ததாக தமிழ் ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை பூர்வீகமாக கொண்ட கா. சண்முகம், சிங்கப்பூரின் அரசியல்வாதி ஆவார்.

ஆலையில் தீ: பெரிய இயந்திரத்தை ஊழியர்கள் பயன்படுத்தியபோது தீ பற்றி விபத்து

அவரின் சொந்த ஊரான காரைக்குடியில் அமைந்துள்ள கோயில் ஒன்றில் சித்திரை திருவிழா நடந்து வருகிறது. இதில் அவர் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார் என அது குறிப்பிட்டுள்ளது.

அவர் இதில் பங்கேற்க ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு நேற்று காலை வந்ததாக கூறப்பட்டுள்ளது.

அதனை அடுத்து, திருச்சியில் இருந்து தனி ஹெலிகாப்டரில் காரைக்குடிக்கு புறப்பட்டு சென்றார்.

பின்னர் மீண்டும், தரிசனம் முடித்துவிட்டு ஹெலிகாப்டர் உதவியுடன் திருச்சி வந்த அவர், சிங்கப்பூருக்கு புறப்பட்டு சென்றதாக கூறப்பட்டுள்ளது.

Work permit அனுமதியின்றி ஃப்ரீலான்ஸ் ஹோஸ்டஸ்களாக பணிபுரிந்த 25 பெண்கள்… அதிரடியாக கைது செய்தது போலீஸ்