சிங்கப்பூரில் சாதித்த ஒரே தென்னிந்திய நடிகை காஜல் அகர்வால்..!

Kajal Aggarwal will star twice in Madame Tussauds Singapore
Kajal Aggarwal will star twice in Madame Tussauds Singapore

சிங்கப்பூரில் உள்ள மேடம் துசாட்ஸ் மியூசியத்தில், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட அல்டிமேட் ஃபிலிம் ஸ்டார் எக்ஸ்பீரியன்ஸில் (UFSE) தென்னிந்திய திரைப்பட நடிகை காஜல் அகர்வாலும் சேரவுள்ளார்.

பொதுவாக பிரபலங்களின் மெழுகு சிலைகள் உருவாக்கப்படுவது வழக்கம். அதில் அதிகம் நடிகர்களும், பாலிவுட் நடிகைகளின் சிலைகளும் அதிகம் இடம்பெறும். தென்னிந்தியாவை பொறுத்தவரை நடிகைகளின் மெழுகு சிலைகள் எங்கும் இடம்பெறவில்லை.

தற்போது முதன்முறையாக தென்னிந்திய சினிமா நடிகைகளில் நடிகை காஜல் அகர்வாலின் மெழுகு சிலை, சிங்கப்பூர் துசாட்ஸ் மியூசியத்தில் வைக்கப்பட இருக்கிறதாம்.

https://www.instagram.com/p/B6KRfJpHgsp/

அடுத்த ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி தான் சிங்கப்பூரில் அவரது சிலை வைக்கப்பட உள்ளததாக காஜல் அகர்வால் தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார்.

இந்நிலையில், ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.