கல்லாங் ரயில் நிலையம் அருகே ரயில் மோதி ஆடவர் உயிரிழப்பு

Kallang MRT station death
(Photo: Julia Yeo)

சிங்கப்பூரில் நேற்று இரவு (பிப். 25) கல்லாங் ரயில் நிலையத்தின் அருகே ரயில் மோதியதில் 31 வயது ஆடவர் உயிரிழந்தார்.

இரவு 9 மணியளவில், கல்லாங் MRT நிலையத்திற்கு அருகே ரயில் ஓட்டுநர் ஒரு பொருளைத் தாக்கியதாக தகவல் கொடுத்தார் என்று SMRT நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் இம்மாதம் வேலையிட விபத்துக்களில் 10 பேர் உயிரிழப்பு

நிலைய மேலாளர் அந்த பாதையில் சோதனை மேற்கொள்ள அனுப்பப்பட்டார், அப்போது நிலையத்திலிருந்து சுமார் 150மீ தொலைவில் ஆடவர் ஒருவர் அசைவின்றி காணப்பட்டார்.

இரவு 9.35 மணியளவில் இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்தாக காவல்துறை தெரிவித்துள்ளது. பின்னர் அந்த ஆடவர் சம்பவ இடத்தில் இறந்ததாக துணை மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டார்.

இந்த சம்பவம், பாசீர் ரிஸை நோக்கி கிழக்கு-மேற்கு பாதையில் நிகழ்ந்துள்ளது.

இதன் காரணமாக, பூகிஸ் (Bugis) மற்றும் ல்ஜூனிட் (Aljunied) நிலையங்களுக்கு இடையே ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன, மேலும் லாவெண்டர் மற்றும் கல்லாங் நிலையங்களும் மூடப்பட்டன.

முதற்கட்ட விசாரணைகளில், சதி திட்டம் ஏதும் சந்தேகிக்கப்படவில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த மரணம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

விதிமுறை மீறல்: 4 பேரின் Work Pass ரத்து – சிங்கப்பூரில் வேலைசெய்ய நிரந்தர தடை!