கம்போங் கிளாமில் களைக்கட்டிய நோன்பு பெருநாள் சந்தை!

Photo: Kampong Glam Official Facebook Page

ரமலான் பண்டிகையை இஸ்லாமியர்கள் உற்சாகமாகக் கொண்டாடும் வகையில், சிங்கப்பூரில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க, கம்போங் கிளாமில் (Kampong Glam) ஆண்டுதோறும் ‘நோன்பு பெருநாள் சந்தை’ நடைபெற்று வருவது வழக்கம்.

உலகின் மிகச்சிறந்த விமான நிலையமாக சாங்கி விமான நிலையம் 12- வது முறையாக விருதை வென்று சாதனை!

அதன் தொடர்ச்சியாக, வரும் ஏப்ரல் 22- ஆம் தேதி அன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், ‘நோன்பு பெருநாள் சந்தை’ கடந்த மார்ச் 15- ஆம் தேதி அன்று தொடங்கி, வரும் ஏப்ரல் 16- ஆம் தேதி வரை ஒரு மாத காலம் நடைபெறவுள்ளது. இந்த சந்தையில், இசை, கலாச்சார நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது. இங்குள்ள அனைத்து உணவு- பானக் கடைகளும் ஹலால் சான்றிதழைப் பெற்றிருக்கும். பக்தாத் தெருவில் கார் நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சந்தையில் ஆடைகள் முதல் அனைத்து வகையான பொருட்களும் இடம் பெற்றிருக்கும். சந்தையின் தொடக்க நாளே, மக்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால், ‘நோன்பு பெருநாள் சந்தை’ களைக்கட்டியது என்றே கூறலாம்.

‘லிஷா’ ஏற்பாடு செய்துள்ள லிட்டில் இந்தியாவின் பாரம்பரிய உணவுப் பயணம் நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு!

மஸ்­கட் தெரு, கந்­த­ஹார் தெரு, பாக்­தாத் தெரு, பஹாங் தெரு, சுல்­தான் கேட், அலி­வால் ஸ்தி­ரீட் கோச் பார்க், சுல்­தான் பள்­ளி­வா­சல் பகு­தி­களை ஒட்­டிய கம்­போங் கிளாம் பகு­தி­யின் ஏழு இடங்­களில் இந்த சந்தை அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 150- க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.