முஸ்லிம்களின் புனிதமான பள்ளிவாசல்கள் அருகில் அரைகுறை ஆடையுடன் பெல்லி நடனம்: கோபமடைந்த நெட்டிசன்கள்

Kampong Glam restaurant belly dance apologises Muslim community
r Abu Jalal Sarimon / Facebook

சிங்கப்பூரில் கம்போங் கிளாமில் உள்ள துருக்கி உணவகத்தில் பெண் அரைகுறை ஆடையுடன் பெல்லி நடனம் ஆடியதற்காக அந்நிறுவனம் முஸ்லிம் சமூகத்திடம் மன்னிப்பு கேட்டுள்ளது.

ஃபேஸ்புக் பயனர் அபு ஜலால் சாரிமோன் என்பவர் கடந்த டிசம்பர் 24 வெளியிட்ட பதிவுக்கு அந்நிறுவனம் மன்னிப்பு கேட்டது.

வாள் வீசி ஊழியரை தாக்கிய நபருக்கு பிரம்படி விதிப்பு

பதிவில், சுல்தான் மசூதிக்கு அடுத்துள்ள புஸ்ஸோரா ஸ்ட்ரீட்டில் உள்ள உணவகத்தில் கிட்டத்தட்ட நிர்வாண கோலத்தில் பெண் நடனக் கலைஞர் பெல்லி நடனத்தை ஆடியது குறித்து அவர் பதிவு செய்தார்.

“முஸ்லிம் சமூகத்திற்கும் புனித மசூதிக்கும் மரியாதை எங்கே ()?” என்று அவர் கேள்வியும் எழுப்பினார்.

இதனை அடுத்து அடுத்த நாள், Derwish Turkish Restaurant அதன் Facebook பக்கத்தில் சில தெளிவுபடுத்தல்களை வெளியிட்டது.

அதில் “ஒரு வாரத்திற்கு முன்பு எங்கள் உணவகத்தில் நடத்தப்பட்ட விருந்துக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் வழக்கமான வாடிக்கையாளர் ஒருவரால் இந்த நடனம் ஏற்பாடு செய்யப்பட்டது என்றும், மசூதியையோ அல்லது முஸ்லிம் சமூகத்தையோ அவமதிப்பது எங்கள் நோக்கம் அல்ல” என்றும் கூறி அது மன்னிப்பு கேட்டது.

“வித்தியாசமாக எதையோ கண்டேன்” என கடற்கரையில் இருந்து தெறித்து ஓடிய சிறுவன் – விரைந்து வந்த போலீஸ்