125 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட “கபிலவஸ்து நினைவுச்சின்னங்கள்” – சிங்கப்பூர் அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு..

Kapilavastu buddha relics in Singapore
Image credits: Tibetan Buddhist Centre

Kapilavastu buddha relics in Singapore: ஹவ் பர் வில்லாவில் உள்ள ரைஸ் ஆஃப் ஆசியா அருங்காட்சியகத்தில் (The Rise of Asia Museum) இலங்கையின் ராஜகுரு ஸ்ரீ சுபுதி கோயிலில் இருந்து கொண்டுவரப்பட்ட சில அரிய நினைவுச்சின்னங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல் முறையாக சிங்கப்பூருக்கு கொண்டுவரப்பட்டுள்ள கபிலவஸ்து புத்தர் நினைவுச்சின்னங்கள் வரும் நவம்பர் 24 முதல் 29 வரை அருங்காட்சியகத்தில் இடம்பெறும்.

சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூவின் 100வது பிறந்தநாள் நினைவு நாணயம்: வெளிநாட்டு ஊழியர்களும் பெற்றுக்கொள்ள ஏற்பாடு

பொதுமக்கள் பார்வைக்கு நவ., 24 முதல், 28 வரை அந்த நினைவுச்சின்னங்கள் காட்சிக்கு வைக்கப்படும். மேலும் சிறப்பு விருந்தினர்களுடன் நிறைவு விழா வரும் நவ., 29 ஆம் தேதி நடைபெறும்.

“Beyond Time: The Legacy of Buddha’s Bone Relics” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கண்காட்சி, திபெத்திய புத்த நிலையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த பழங்கால நினைவுச்சின்னம், “AA” வகை தொல்பொருட்கள் மற்றும் கலைப் பொக்கிஷங்கள் என்று 2015 ஆம் ஆண்டில் குறிப்பிடப்பட்டன.

அதாவது அவை பெரிதும் பாதுகாக்கப்படும் பழங்கால பொருள் என்பது அதன் அர்த்தம், மேலும் இதனை சாதாரண பாதுகாப்பின் அடிப்படையில் வெளிநாடுகளுக்கு கொண்டு செல்ல முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

அவை “கபிலவஸ்து நினைவுச்சின்னம்” என்று அழைக்கப்படுகின்றன, ஏனெனில் அவை இந்தியாவின் பிப்ரஹ்வாவில் (Piprahwa) உள்ள இடத்திலிருந்து 1898 ஆம் ஆண்டில் மீட்கப்பட்டன.

பிப்ரஹ்வா, கபிலவஸ்துவின் பண்டைய நகரமாக நம்பப்படுகிறது.

கலந்துகொள்ள ஆர்வமுள்ள பொதுமக்கள் முன் பதிவு செய்யலாம்: https://bone-relics.mypath.com.sg/

நீரில் கண்டெடுக்கப்பட்ட இளைஞர் ஒருவரின் சடலம் – அருகில் இருந்த மது பாட்டில்கள் & ஸ்னாக்ஸ்.. விசாரணை