சிங்கப்பூரிலிருந்து இந்தியாவுக்குச் செல்வோரின் கவனத்திற்கு ! – விதிகளைக் கடைபிடிக்குமாறு உத்தரவிட்ட மாநிலம்!

File Photo covid
இந்தியாவின் கர்நாடகா மாநில அரசாங்கம் , சிங்கப்பூரிலிருந்து செல்லும் பயணிகள் ஒரு வாரம் கட்டாயம் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.சீனா,ஹாங்காங்,ஜப்பான்,தென் கொரியா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து கார்நாடகா மாநிலம் செல்லும் பயணிகளுக்கும் அதே விதி பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிடப்பட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகள் விமான நிலையங்களுக்கு வந்ததும் RT-PCR பரிசோதனை முடிவுகளை சமர்ப்பிக்க வேண்டும் என்று இந்திய அரசாங்கம் ஏற்கனவே அறிவித்திருக்கிறது.இந்நிலையில் கர்நாடக அரசாங்கம் புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.
தொற்று அறிகுறிகள் இல்லாத பயணிகள் விமான நிலையத்திலிருந்து வெளியேறலாம்.ஆனால்,அவர்கள் முகக்கவசம்,சமூக இடைவெளி,தூய்மையான பழக்க வழக்கங்கள் போன்றவற்றை பின்பற்ற வேண்டும்.
அவர்கள் வீட்டிலேயே ஏழு நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.தொற்று அறிகுறிகளுடன் இருப்பவர்கள் மருத்துவ நிலையங்களில் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் கடந்த டிசம்பர் மாதம் 12 பயணிகளுக்கு Covid-19 தொற்று இருப்பது உறுதியானது.எனவே, விமான நிலையத்தில் இருமல்,சளி,காய்ச்சல்,தலைவலி,வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளுடன் இருக்கும் பயணிகள் சுகாதாரக் குழுவை அணுக வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.