இந்தியாவில் வசூலை அள்ளிக்குவித்த பிரபல படத்திற்கு சிங்கப்பூர் அரசு தடை! வெளியான காரணம்!

Singapore Airlines A380 restaurant
Singapore Airlines A380 restaurant (Photo Credit: AFP/ROSLAN RAHMAN)

தி காஷ்மீர் ஃபைல்ஸ்  திரைப்படம் காஷ்மீர் கிளர்ச்சியின் போது காஷ்மீரி இந்துக்கள் காஷ்மீரத்தை விட்டு வெளியேறியதை அடிப்படையாகக் கொண்டது.

இதில் மிதுன் சக்கரவர்த்தி, அனுபம் கெர், தர்ஷன் குமார், பல்லவி ஜோஷி, சின்மயி மண்டலேகர், பிரகாஷ் பெலவாடி மற்றும் புனித் இஸ்ஸார் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

அரியானா, மத்தியப் பிரதேசம், குஜராத், கர்நாடகா மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் இப்படத்திற்கு மாநில கேளிக்கை வரிவிலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இத்திரைப்படம் வெளியான மூன்று நாட்களுக்குள் பாக்ஸ் ஆபிஸ் வெற்றியைப் பெற்றது. சிறு செலவில் எடுத்த இந்த இந்தி திரைப்படம் பல வசூல் சாதனைகளை படைத்துள்ளது.

உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர், இத்திரைப்படத்தை வெளியிட தடை கோரி பொது நலன் வழக்குத் தாக்கல் செய்தார்.

மேலும், இந்தத் திரைப்படம் இசுலாமியர்களை காஷ்மீரி பண்டிட்டுகளின் கொலையாளிகளாக சித்தரிக்கக்கூடும் என்ற அடிப்படையில் படத்தின் வெளியீட்டைத் தடுக்கக் கோரியது.

அது இசுலாமியர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் மற்றும் அவர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் விதமாக உள்ளது எனக்கூறப்பட்டது.

தொழில்நுட்ப காரணங்களுக்காக மும்பை உயர்நீதிமன்றத்தால் பொது நல வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில் The Kashmir Files என்ற இந்தியத் திரைப்படத்திற்குச் சிங்கப்பூர் தடைவிதித்துள்ளது.

திரைப்படம் சிங்கப்பூரில் உள்ள பல்வேறு சமூகத்தினரிடையே பகைமையை உண்டாக்கும் சாத்தியம் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

சிங்கப்பூரில் உள்ள இன, சமயங்களை இழிவுபடுத்தும் திரைப்படங்களுக்குத் தடை விதிக்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறினர்.