பணியிடத்தில் நேர்ந்த விபத்து! – கெப்பல் துறைமுகத்தில் கிரேன் விழுந்ததில் காயமடைந்த ஊழியர்களும் காணாமல்போன ஊழியரும்; தொழிலாளர்களின் நிலை என்ன?

Prime mover driver dies vehicle falls sea Keppel Terminal

சிங்கப்பூரின் Keppel துறைமுகத்தில் ஆகஸ்ட் 22 அன்று காலை 10:40 மணியளவில் ஒரு பெரிய கட்டிடம் கடலில் இடிந்து விழுந்ததில் நான்கு தொழிலாளர்கள் காயமடைந்தனர்.மேலும் மற்றொரு தொழிலாளர் காணவில்லை.கடலில் காணாமல்போன தொழிலாலளியை தேடும் பணியில் டைவர்ஸ் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கெப்பல் துறைமுகத்தில் பணியிட விபத்து ஏற்பட்டதை மனிதவள அமைச்சகத்தின் (MOM) செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார்.ஒரு கப்பலுடன் இருந்த ஒரு கிரேன் கவிழ்ந்து, அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கப்பலில் சாய்ந்து கிரேன் நின்றிருந்த கான்கிரீட் தூணின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
இதனால் இரண்டு ஊழியர்கள் கடலில் விழுந்ததாகக் கூறப்படுகிறது.ஒரு தொழிலாளியை மீட்ட நிலையில் மற்ற தொழிலாளி தற்போது காணவில்லை என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கப்பலில் இருந்த 38 வயதான பங்களாதேஷ் தொழிலாளி ஒருவர் கடலில் விழுந்துவிட்டதாகவும், அவர் இன்னும் காணவில்லை என்றும் அமைச்சகம் கூறியது.
இரண்டு வங்காளதேசிகள், ஒரு சீன நாட்டவர் மற்றும் ஒரு சிங்கப்பூரர், சிறிய காயங்களுக்கு ஆளாகியுள்ளனர்.2022 ஆம் ஆண்டில் பணியிட மரணங்கள் கடுமையாக உயர்ந்துள்ளன.2021-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தாண்டின் இறுதிக்குள் பணியிட மரணங்களின் எண்ணிக்கை விறுவிறுவென உயர்ந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.