தங்கத்தை ஆடையில் தைத்து அணிந்து வந்தபோது சிக்கிய இளம்பெண்!

Photo: Kerala customs

துபாயில் இருந்து கேரளாவுக்கு 1,884.6 கிராம் தங்கத்தைக் கடத்தி வந்த இளம்பெண் கைது செய்யப்பட்டார்.

புகழ்பெற்ற நாகூர் கந்தூரி விழா: சிங்கப்பூரில் இருந்து நாகூர் பறந்த “சிறப்புக்கொடி”

துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கோழிக்கோடு வந்த விமானத்தில் பயணித்தவர்களின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். காசர்கோடைச் சேர்ந்த 19 வயதான ஷகலா (Shahala), சோதனையில் சிக்காமல் வெளியேறியுள்ளார். ஆனால், ரகசிய தகவல் பெயரில் வெளியே காத்திருந்த காசர்கோடு மாவட்ட காவலர்கள் ஷகலாவைப் பிடித்தனர்.

முஸ்லிம்களின் புனிதமான பள்ளிவாசல்கள் அருகில் அரைகுறை ஆடையுடன் பெல்லி நடனம்: கோபமடைந்த நெட்டிசன்கள்

அவர் 1,884.6 கிராம் தங்கத்தை ஆடையில் மறைத்து வைத்து தைத்து அணிந்து வந்ததைக் கண்டறிந்து கைது செய்தனர். பின்னர், ஷகலாவையும், தங்கத்தையும் சுங்கத்துறை அதிகாரிகள் ஒப்படைத்தனர். கடத்தப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் ரூபாய் ஒரு கோடி என்பது குறிப்பிடத்தக்கது.