மறைந்த முன்னாள் சிங்கப்பூர் நடிகர் – ஆழ்ந்த இரங்கல்கள்.

khaironi

“Don’t Worry Be Happyஎன்னும் மீடியாகார்ப்பின் சிட்காமில், பெட்ரோல் கியோஸ்க் ஊழியராக அலி என்னும் கதாபாத்திரத்தில் நடித்த சிங்கப்பூர் நடிகர் கைரோனி சாலே காலமானார்.

 

சேனல் 8 இன் செய்தி தொகுப்பாளர் ஈவ்லின் லாம், கைரோனி இறந்த செய்தியை பேஸ்புக்கில் ஜூன் 19 அன்று பகிர்ந்து கொண்டார். அவரின் பதிவில் “லாம்” தனது சக ஊழியருடன் நடந்து கொண்டே செய்தி அறிக்கை செய்து கொண்டிருந்தார்.

 

” Don’t Worry Be Happy “ 1996 முதல் 2002 வரை ஓடியது, மேலும் அதில் Chew Chor Meng மற்றும் Quan Yifeng ஆகியோரும் நடித்திருந்தனர்.

மேலும் மீடியாகார்ப் நிறுவனத்தில் மூத்த ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்தார் கைரோனி என்பதுவும் குறிப்பிடத்தக்கது. அவர் 37 ஆண்டுகளாக அந்நிறுவனத்தில் இருந்தார் என்பதும் CNA பணியகத்துடன் இந்தோனேசியாவில் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக செலவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.