தெம்பனீஸில் நடைபாதை மேற்கூரை மேலே ஆபத்து தெரியாமல் ஓடும் குழந்தைகள் – பெற்றோர்கள் மீது நெட்டிசன்கள் காட்டம்

Screenbgrab/Telegram/Sgfollowsall

தெம்பனீஸில் உள்ள நடைபாதை மேற்கூரை மேலே குழந்தைகள் குழு ஒன்று ஓடுவது போன்ற வீடியோ பேஸ்புக்கில் வைரலானது.

பள்ளி சீருடைகளை அணிந்த ஆறு குழந்தைகள் மேற்கூரையில் ஓடுவது போன்ற வீடியோ கடந்த ஜூலை 8 வெள்ளிக்கிழமை, அன்று வெளியானது.

பொது போக்குவரத்தில் பிறப்புறுப்பை காட்டிய ஆடவர் – பல முறை அவ்வாறு செய்ததாக புகார்

பந்துகள் மற்றும் பிற பொருட்களை ஒருவருக்கொருவர் தூக்கி எறிந்து அதனை எடுக்க மேற்கூரை வழியாக ஓடுவதைக் காணலாம்.

இது குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல், மற்றவர்களின் பாதுகாப்பிற்கும் ஆபத்தை விளைவிக்கும் என சில நெட்டிசன்கள் விமர்சனம் கூறியுள்ளனர்.

பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை சரியாக கவனிக்கவில்லை என பலர் அவர்களின் பெற்றோர்களை குறை கூறினர்.

இந்த குறை கருத்துக்களால் கோபமடைந்த இரண்டு குழந்தைகளின் தந்தையான ஜாஸ்பர் கான், சம்பவம் குறித்து ஜூலை 10 ஆம் தேதி காவல்துறையில் புகார் அளித்ததாக கூறியுள்ளார்.

அதே போல, வீடியோவை எடுத்த நபரிடம் அந்த வீடியோ பதிவை அகற்றுமாறு அதிகாரிகளைக் கேட்க விரும்புவதாகவும் அவர் ஏசியா ஒன்-யிடம் கூறினார்.

சிங்கப்பூரில் வேலையில் உள்ள தமிழ் ஊழியர்… சொந்த வீட்டில் நடந்த கொடுமை – சோகத்தில் குடும்பம்