இரக்கம் காட்டுவதில் மற்றவர்களை விட கனிவானவர்கள் சிங்கப்பூர் வெளிநாட்டு ஊழியர்கள்..!

Kind neighborhood cleaners free bird from string tied to its feet at Hougang (Photo : STOMP)

இரக்கம் அவற்றின் நேரடி பொருள் சிங்கப்பூர் வெளிநாட்டு ஊழியர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. ஆம், தன் பணியை புறம் தள்ளிவிட்டு ஒரு சிறிய உயிரின் மீது இரக்கம் காட்டி, அந்த பறவைக்கு மறுவாழ்வு அளித்த இரு தொழிலாளிகளை பற்றி இங்கு பார்ப்போம்.

பறக்க முடியாமல் தவித்த ஒரு சிறு பறவைக்கு, தன்னுடைய வேலைகளை புறம் தள்ளிவிட்டு உதவிய நல்லுள்ளம் கொண்ட ஊழியரை காணுகையில், தன்னால் நம்பமுடியாத அளவிற்கு மனதை தொட்டதாக ஸ்டாம்ப் (Stomp) வாசகர் மெலிசா கூறியுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 15) மாலை 5.15 மணியளவில், பிளாக் 917A, ஹௌகங் அவென்யூ 9, வழியாக மெலிசா சென்று கொண்டிருந்தபோது, ​​இரண்டு கிளீனர்களும் அந்த பறவையை விடுவிக்க பணிகளை மேற்கொண்டதை அவர் கண்டார்.

அந்த பறவையின் கால்களைச் சுற்றி ஒரு நீண்ட நூல் கட்டப்பட்டிருந்ததாக அவர் கூறினார், அதனால் அவற்றால் பறக்க முடியவில்லை.

மேலும் அவர், “பறவையை எங்கே கண்டுபிடித்தார்கள் என்று நான் அவர்களிடம் கேட்கவில்லை, ஆனால் அவர்கள் மிகவும் பொறுமையாக கயிற்றின் முடிச்சை அவிழ்க்கும் பணியில் ஈடுபட்டு வெற்றிகரமாக அவற்றை அகற்றினர்” என்றார்.

மெலிசா கூறுகையில், இந்த பறவையை விடுவிப்பதற்கான முழு முயற்சியும் சுமார் பத்து நிமிடங்கள் நீடித்ததாக கூறினார். இதில் பறவையை வெற்றிகரமாக விடுவிப்பதற்கு முன்னாள் உள்ள இறுதி தருணங்களை ஸ்டாம்புடன் பகிர்ந்து கொண்டார்.

சிங்கப்பூரில் அந்த இரு வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு தன்னுடைய இதயம் கனிந்த பாராட்டையும் மெலிசா தெரிவித்தார்.

மேலும், அவர் கூறுகையில், உண்மையில் இதுபோன்ற இரக்கம் கொண்ட விஷயங்களைப் பற்றி அக்கறை கொள்ளாத நம்மில் பெரும்பாலோரை விட அவர்கள் கனிவானவர்கள், என்று வாழ்த்தினார்.