சிங்கப்பூரில் கம்பீரமான ராஜ நாகம், பெரிய உடும்பை அப்படியே விழுங்கும் பிரம்மிப்பு காட்சி – இணையத்தில் வைரல்

All Credits: David Wirawan

சிங்கப்பூரில் கம்பீரமான ராஜ நாகம் ஒன்று பெரிய உடும்பை அப்படியே விழுங்கும் காட்சிகள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த பிரம்மிப்பூட்டும் காட்சியை கண்ட புகைப்படக் கலைஞர் ஒருவர் அதனை அழகான முறையில் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். இதனை கடந்த ஏப். 30 அன்று அவர் கண்டதாக கூறப்பட்டுள்ளது.

ஊழியர்களின் சம்பளம் 15 சதவீதம் வரை அதிகரிப்பு – சம்பள உயர்வை எதிர்பார்த்து அதிகமான ஊழியர்கள்!

டேவிட் விரவன் என்ற அந்த புகைப்படக் கலைஞர் புக்கிட் திமாவுக்கு அருகிலுள்ள Hindhede nature parkல் இந்த கண்கவர் காட்சியை கண்டு, அதனை புகைப்படம் எடுத்துள்ளார்.

அந்த பகுதியில் பிற்பகல் 3 மணியளவில் விரவன் இருந்ததாகவும், அப்போது தான் அந்த காட்சியை காணும் வாய்ப்பு கிடைத்தது என்றும் மதர்ஷிப்பிடம் பேசிய அவர் கூறினார்.

அந்த ராஜ நாகம் இரையை முழுவதுமாக விழுங்கும் முழு நகர்வையும் அவர் ஆவணப்படுத்த முடிந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

அதாவது இந்த செயல்முறை சுமார் இரண்டு மணி நேரம் எடுத்துக்கொண்டதாக அவர் கூறினார்.

இது போன்ற காட்சிகள் சிங்கப்பூரில் புதிதல்ல, நமது மீடியாவில் இதுபோன்ற பல காட்சிகளை நாம் முன்னர் பதிவிட்டுள்ளோம். படிக்க 

All Credits: David Wirawan

சிங்கப்பூரில் இருந்து கோவை விமான நிலையத்துக்கு வந்த விமானம்.. சுமார் 4.2 கிலோ தங்கம் – சிக்கிய இருவர்