சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த பயணிக்கு கிருமித்தொற்று உறுதி – சென்னைக்கு மாதிரி அனுப்பி வைப்பு

Coimbatore Flights

சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாட்டின் கோவைக்கு வந்த பயணி ஒருவருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒமைக்ரான் வகை அச்சத்தின் காரணமாக வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு வரும் பயணிகளுக்கு சோதனை கடுமையாக மேற்கொள்ளப்படுகிறது.

நிலவழி VTL மூலம் டிசம்பர் 20 முதல் மலேசியாவுக்குள் நுழையலாம்!

அந்த வகையில் சென்னை, கோவை, திருச்சி மற்றும் மதுரை சர்வதேச விமான நிலையங்களில் பரிசோதனை நடவடிக்கைகளை சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், சிங்கப்பூரில் இருந்து கோவை விமான நிலையம் வந்த பயணிகளுக்கு கடந்த (டிச.12) பரிசோதனை செய்யப்பட்டது.

அப்போது ஒருவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 3 பேர் வந்த குடும்பத்தில் அவரும் ஒருவர்.

சிங்கப்பூரில் இருந்து அவர் வந்த காரணத்தால், மரபணு பரிசோதனைக்காக அவரது மாதிரியை சென்னையில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இரும்புக் கம்பி மொத்தமாக விழுந்ததில் உடல் நசுங்கி வெளிநாட்டு கட்டுமான ஊழியர் மரணம்!