திடீரென கார் முன்னே பாய்ந்த காட்டுப்பன்றி மரணம் (காணொளி) – விபத்துக்குப் பிறகு விலங்குகளுக்கு உதவாமல் செல்வது சட்டவிரோதமானது

wild-boar killed
Roads.sg/FB

விரைவுச்சாலையில் காட்டுப்பன்றி மீது கார் எதிர்பாராதவிதமாக மோதியதில் காட்டுப்பன்றி உயிரிழந்தது.

Roads.sg என்ற பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட காணொளியின் படி, இந்த சம்பவம் கடந்த டிசம்பர் 7 அன்று நள்ளிரவுக்குப் பிறகு, கிராஞ்சி விரைவுச்சாலையில் (KJE) நடந்தது.

சிங்கப்பூரில் மூன்று ஆடவர்களை தேடி வரும் காவல்துறை!

சாலையின் இடதுபுறத்தில் இருந்து வந்த பன்றி காரின் முன் பாய்ந்தபோது, ​​கார் சாலையின் நடுப் பாதையில் செல்வதை கேமரா காட்சிகள் காட்டுகின்றன.

திடீரென ஏற்பட்ட உரத்த சத்தத்தால், காரில் இருந்தவர்கள் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை சந்தித்தனர்.

காணொளியின் முடிவில், சாலையில் இறந்து கிடக்கும் காட்டுப்பன்றி மற்றும் பின்னால் போக்குவரத்து காவலர் நிற்பதையும் காணமுடிகிறது.

சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின்படி, விபத்துக்குப் பிறகு விலங்குகளுக்கு உதவ நிறுத்தாமல் செல்வது சட்டவிரோதமானது.

அவ்வாறு செய்யத் தவறினால் S$3,000 அபராதம் அல்லது ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

இந்தச் சம்பவத்தில் போக்குவரத்து விதிமீறல் எதுவும் செய்யப்படவில்லை என்பதை புரிந்துகொள்ள முடிவதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Omicron கிருமியை எதிர்கொள்ள தயாராகும் சிங்கப்பூர்: “பூஸ்டர்” தடுப்பூசி முக்கிய பகுதியாக இருக்கும் – பிரதமர் லீ